பெயர்களுக்குப் பின்னால் உள்ள சாதியும் சமயமும் கதைக்குத் தேவையில்லை : இயக்குனர் ராம்
இயக்குனர் ராமின் எல்லாப் படங்களும் ஏதோ ஒருவகையில் என்னை ஈர்த்திருக்கிறது. ஆனால் அவை எல்லாவற்றிலும் சிறந்த ஒரு படைப்பு ஏழுகடல், ஏழுமலை என்பேன். 2024 ல் றொட்டாம் திரைப்படவிழாவில், அப்படத்தினைப் பார்த அனுபவமும், பின்னர் இயக்குனர் ராமுடன் பேசிய விடயங்களும் இன்னமும் பசுமையாகவேயுள்ளன. இப்போது 'ஏழுகடல் ஏழுமலை' திரைக்கு வருகிறது. திரையில் அது சிறப்பான சினிமா அனுபவத்தைத் தரும் எனும் நம்பிக்கை நிறையவே உண்டு. 2024ல் ஏழுகடல் ஏழுமலை குறித்து எழுதிய இக்குறிப்பினை மீளவும் இத்தருணத்தில் பதிவு செய்கின்றோம்.