free website hit counter

The Family Man2 இணையத் தொடரை தடைசெய்ய தமிழக அமைச்சர் வலியுறுத்தல் !

சின்னத்திரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

The Family Man2 இணைய தொடருக்கு எதிரான கண்டனங்கள் தமிழக அரசின் கவனம் பெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.

இத் தொடரின் முன்னோட்டம் வெளியாகியுள்ள நிலையில், ஈழத்தமிழர் போராட்டத்தை இழிவுப்படுத்தும் வகையில் அது உள்ளதாக பல தரப்புக்களிலும் கண்டனங்களும் எதிர்ப்புக்களும் எழுந்துள்ள நிலையில், தொடர் ஒளிபரப்பானால் மாநிலத்தில் மதநல்லிணக்கத்தை காப்பது கடினமாகும். ஆதலால் அதனைத் தடை செய்ய வேண்டும் என தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் மூலம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வலியுறுத்தி உள்ளார்.

அவர் தனது கடிதத்தில் மேலும் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இத் தொடரை நிறுத்தவோ, தடை செய்யவோ வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் ஜூன் 4ம் திகதி முதல் அமேசான் பிரைமில் இந்தத் தொடர் வெளியாக உள்ள நிலையில் தமிழக அரசு இதற்கு தடை வேண்டி மத்திய அரசிடம் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction