வடமாகாணத்தில் நடைபெற்ற 244 ‘மகாவீரர் நாள்’ நினைவேந்தல் நிகழ்வுகளில் 10 இடங்களில் விடுதலைப் புலிகள் தொடர்பான சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மாவீரர் நாள் நினைவேந்தல்: SLPP கட்சியின் ரேணுகா பெரேரா கைது
அண்மையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (04) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் எங்களிடம் உள்ளன: சானக்கியன்
250 இற்கும் அதிகமான உயிர்களை பலிகொண்ட 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் தன்னிடம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
‘வடக்கிற்கும் தெற்குக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த சதி’: மாவீரர் கொண்டாட்டம் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர்
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் மாவீரர் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் தற்போதைய நிர்வாகத்தின் கீழ். இலங்கையின் வட மாகாணத்திலும் இதேபோன்ற நிகழ்வுகள் இடம்பெறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால குற்றம் சுமத்தியுள்ளார்.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அரிசி இறக்குமதி செய்யப்படாவிட்டால் கடும் தட்டுப்பாடு ஏற்படும்
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தேவையான அரிசியை அரசாங்கம் இறக்குமதி செய்யாவிட்டால் நாடு பாரிய அரிசி தட்டுப்பாட்டைச் சந்திக்க நேரிடும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
நான் எதிர்க்கட்சி MPயால் தாக்கப்பட்டேன்: ராமநாதன் அர்ச்சுனா
யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுன, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, SJB பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.