ஐரோப்பாவை சுற்றிலும் உள்ள ஒளிப்பதிவுக்கருவிகளில் பதிவான காட்சிகளில்; இரவு வானத்தில் இருந்து
வந்துக்கொண்டிருக்கும் போது நீல நிறத்தில் பிரகாசித்த விண்கல் போர்த்துக்கல் நாட்டில் விழுந்ததாகவும் இது விழுந்த இடத்தின் பாதிப்புக்கள் பற்றி ஆய்வுகள் தொடங்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இது ஒரு குறிப்பிடத்தக்க அளவைக் கொண்டிருந்த போதும் இந்த விண்கல் வானில் தெரியும் வரை ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தால் வேவு பார்க்க இயலவில்லை.
எமது பூமியின் பாதுகாப்பு அலுவலகம் வானில் இருந்து வரும் விண்கற்களின் அளவு மற்றும் பாதை (Trajectory) என்பவற்றை கணக்கிடக்கூடிய கட்டமைப்பை மட்டுமே கொண்டுள்ளது என ESA விளக்கியுள்ளது.