free website hit counter

"நீங்கள் தேடுவது எதுவோ நூலகத்தில் உள்ளது"

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

போட்டிகள் நிறைந்த உலகில் தன்னை வளர்த்தெடுக்கப்போகும் தொழிலை தேடுவதே ஒரு தொழிலாக மாறியபோது இணையம் ஒரு பெரு வெள்ளமாக அள்ளித்தந்த வாய்ப்புக்களை முறையாக பயன்படுத்தி முன்னேறியவர்கள் பலர்.

அதிலும் சில சிக்கல்கள் இருந்தன. குறிப்பாக படைப்பாற்றல் துறையில் பல்வேறு பிரிவுகள் தலைதூக்கி வான் உயர தொடங்கியுள்ளதால் படைப்பாற்றல் அடிப்படை துறையினரின் தொழில் வாழ்க்கை மாற்றத்தை நோக்கி செல்கிறது எனலாம். இன்றைய வேலை வாய்ப்பை தேட உதவும் LinkedIn சமூகஊடக வலைத்தளத்தில் அண்மையில் பார்த்த பதிவு ஒன்று அடுத்தகட்ட தொழில்துறை தொடர்பாக ஆழமாக எழுந்த கேள்விகள் சரிதான் என ஆமோதிக்கவைத்தது, ஆனால் காலமே அதற்கான விடையை தரவேண்டும். 

Vanshika Khanna எனும் காட்சி வடிவமைப்பாளர் இந்தப்பதிவை LinkedIn இனில் பதிவிட்டிருந்தார்.

// கிராஃபிக் டிசைனர்கள்; G-R-A-P-H-I-C-Sக்கு மட்டுமே!

கிராஃபிக் வடிவமைப்பாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை பின்வரும் அத்தியாவசிய தகமைகளுடன் இடுகையிடுவதை நிறுத்தவும்:

- வீடியோ எடிட்டிங் திறன்
- Adobe after effects and premiere pro ஆகியவற்றில் தேர்ச்சி
- UX/UI திறன்கள்
- அனிமேஷன் அறிவு
- Jira & Agile உபயோக அறிவு

நாங்கள் சூப்பர் மனிதர்கள் அல்ல, ஆனால் நிச்சயமாக ரோபோக்களும் அல்ல!

ஆம், நிச்சயமாக, வளர்ந்து வரும் தொழில்துறையில் ஒருவர் அடிப்படைகளை அறிந்திருக்க வேண்டும், இதனால் அவர்களின் குழு உறுப்பினர்களுடன் ஒத்துழைப்பது மற்றும் அவர்களின் சொற்களைப் புரிந்துகொள்வது எளிது.

ஆனால் நிபுணத்துவத்தை எதிர்பார்க்கிறீர்களா? நியாயமில்லை!

கிராஃபிக் டிசைன் என்பது ஒரு ஆழமான துறையாகும். இதுபோன்ற வினோத-அதிக சுமை தேவைகள்; திறமையான வடிவமைப்பாளர்களை இழக்கச் செய்கின்றன, ஏனெனில் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் நாங்கள் உண்மையில் பயப்படுகிறோம்.//

இந்தப்பதிவை அடுத்து சில குரல்கள் உயர்ந்தாலும் பல குரல்கள் கேட்கவே இல்லை. ஒவ்வொருவரும் இதனை பார்க்கும் விதம் வேறுபடுவதால் நவீன கால தொழில் துறையில் இவை சகஜமாகிவிடுகிறது.

தொழில் வாழ்க்கையை நிபுணத்துவமிக்கதாக மாற்ற உதவும் LinkedIn சமூக ஊடகத்தின் ''தொழிலே" தொழில் வாய்ப்பு இடுகைகளை வழங்குவது. அதில் முக்கியமாக படைப்பாற்றல் துறை சார் வேலைவாய்ப்பின் அணுகுமுறைகள் குறிப்பிட்ட தகமைகளை விட மேலதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. படித்து பட்டம் பெற்ற துறையில் வேலை தேடி பெறுவது சவாலாக மாறியுள்ளதை விட இவ்வாறான வேலை வழங்குனரின் அதிக எதிர்பார்ப்புக்கள் சவாலை கூட்டியுள்ளதாக தொழில் தேடுவோர் கருதுகின்றனர். 

இது வளர்ந்துவரும் தொழில்துறையினரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை கொண்டுவருகிறது. மாற்றத்தை விரும்புவோர்; வருமானத்திற்காக ஒரு தொழில்; பேரார்வத்திற்காக இன்னொரு வேலை என்று பயணிக்கின்றனர். ஒன்றிலிருந்து பெரும் அனுபவத்தை அல்லது பாடத்தை மற்றையதில் உபயோகித்துக்கொள்வதை இலகுவாக்கிக்கொள்கின்றனர்; ஒன்று சருக்கினாலும் ஒன்று கைவிடாது பாதுகாப்பாதாக எடுத்துக்கடந்து செல்கின்றனர். இந்த போக்கு அனைவருக்கும் பொருத்தமாக அமையாதும் போகலாம். கருமமே கண்ணாக ஒரு தொழில்; பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நிலைப்பவர்களும் உண்டு.

காலம் தரும் மாற்றங்களை அனுமதித்து தம் வாழ்வை புதுப்பிப்பவர்களின் அல்லது மேன்மை அடைய முனைவோர்களின்; இந்த தருணத்தில் நிச்சயம் வாசிக்க வேண்டிய ஒரு இலக்கிய புனைகதை "What you are looking for is in the library" (நீங்கள் தேடுவது நூலகத்தில் உள்ளது) ஆகும்.

 ><ஒரு மரம் வளர்ந்து காய்த்து பயன் தருவதும் ஒரு மனிதன் வளர்ந்து பயனடைந்து பயன் கொடுப்பதற்கும் ஒற்றுமை உள்ளது. பொதுவாக நாம் நிலத்துக்கு மேல் வாழ்வதால் மரங்களின் பூ, அல்லது காய்கனிகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம். சிலநேரம் நிலத்துக்குகீழ் ஏதும் சுவாரஸ்யமெனில் வேரில் விளையும்  கரட், கிழங்கு போன்று நமக்கு பயன்தரும் தாவரங்களுக்கு  நமது கவனத்தை மாற்றுவோம். மரங்களை பொருத்தவரையில் நிலத்துக்கு மேல் மற்றும் நிலத்துக்குகீழ் வளரும் அனைத்துமே சம அளவில் மிக முக்கியமானது. இரண்டுமே சமமான வளர்ச்சியை அடைந்திருந்தாலொழிய மரத்தில் பயன் இல்லை. அதுபோலத்தான் மனிதனின் தொழில் வாழ்க்கையும் சமநிலையில் வளரவேண்டும்>> என "What-you-are-looking-for-is-in-the-library" எனும் இந்த நூலில் ஒரு கதையில் சொல்லப்படுகிறது.

ஒரு அமைதியற்ற ஆடைத்தொழில் உதவியாளர் புதிய திறன்களைப் பெறத் தேடுகிறார், ஒரு தாய் மகப்பேறு விடுப்புக்குப் பிறகு வேலையில் குறைவைக் கடக்க முயற்சிக்கிறார், கணக்காளர் ஒருவர் பழங்காலக் கடையைத் திறக்க ஏங்குகிறார், சமீபத்தில் ஓய்வு பெற்ற சம்பளக்காரர் புதிய நோக்கத்தைத் தேடுகிறார். இக்கதையில் வரும் இவர்களின் தேடலுக்கு தீர்வாக அவர்கள் அருகில் நாடும் நூலகமும் அங்குள்ள நூலகரும் அமைகின்றன. இதுவே இந்த புத்தகத்தின் சாரம்சம். ஒரு நூலகத்தால் ஒருவருடன் இணைந்து அவரின் இதயம் சொல்வதை கேட்கவைப்பதை நம் இதயத்திற்குள் கடத்தும் விதமும் இதனுடன் சேர்ந்தது.

2020 ஆம் ஆண்டு ஜப்பான் நாவலாசிரியர் மிச்சிகோ அயோமா (Michiko Aoyama) என்பவரால்  எழுதி வெளியிடப்பட்ட இந்த புத்தகம் ஜப்பானின் சிறந்த விற்பனைகளில் ஒன்றாகவும்; டைம்ஸ் சஞ்சிகையின் 2023ஆம் ஆண்டில் படிக்க வேண்டிய சிறந்த 100 புத்தகங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இவை தவிர ஆங்கில இணைத்தளங்களின் கருத்துக்கணிப்புக்களில் நற்மதிப்பையும் பெற்றுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பில் தற்போது இந்த புத்தகம் கிடைக்கபெற்றாலும் இலகு நடையில் யாதார்த்தங்களின் உச்சத்தையும் தத்துவங்களின் நுனியையும் தொட்டு கதையோடு கதையாக நம் 'கதையையும்' இணைத்துக்கொண்டு சுவாரஸ்யமாக பயணிக்கவைக்கிறார் அயோமா மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆலிஸ்சன் வாட்ஸ்'.

மறுக்கவும் மறக்கவும் இயலாத மாற்றத்தை சற்று இலகுவாக்கி நம்மை ஏற்கவைப்பதில் ஒரு ஏணிப்படியாக இந்த புத்தகம் இருக்கும் என்பதில் என்னை பொருத்தவரையில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction