free website hit counter

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் நிறைவு பெறும் இந் நோன்பு.

சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் .

மாதங்களில் நான் மார்கழி என்றான் கீதையின் நாயகன் கிருஷ்ணன். பகவானே பிரியமுற்றுக் கூறுவதாக இருப்பதால் அது சிறப்பாகத் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஏதோ ஒரு வகையில் சிறப்பாகவே இருக்கிறது. அப்படியிருக்கும்போது மார்கழி மாதத்தினை தனது பிரியமான மாதமாக பகவான் சொல்வது ஏன் ?

கேட்ட வரம் அருளும் வரலக்ஷ்மி தேவியின் விரத்தை வெள்ளிக்கிழமையில் இந்து மகளிர் அனுஷ்டிப்பது வழக்கம். பெண்கள் நற்கதிப்பயனை அடைய இவ்விரதமதை ஆண்டுக்கு ஒருமுறை கைக்கொள்வர். இவ்விரதத்தை முறையாகக் கைக்கொண்டு பெண்கள் கையில் நூல் அணிவர்.

"அன்ன வயற் புதுவை யாண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல்பதியமின்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

ஆனி மாதத்தில் வரும் பௌர்ணமி “குரு பூர்ணிமா” அல்லது “வியாச பூர்ணிமா” என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் சன்னியாச தர்மத்தில் இருக்கும் சன்னியாசிகள் வியாச பூஜை செய்து வேத வியாசரை ஆராதிப்பார்கள். இந்த பூமியில் அவதரித்து, உள்நிலை மாற்றத்திற்கான அறிவை வழங்கிய ஞானமடைந்த குருமார்களைக் கொண்டாடும் விதமாக இந்த நாள் அமைந்திருக்கிறது.

எப்போதும் சிவ தியானத்திலிருக்கும் நந்திகேஸ்வரர் ஜீவாத்மாவின் அடையாளம். பரமாத்வை அடையும் நோக்கில் தியானித்திருக்கும் ஜீவாத்மாவிற்கு இடையுறு செய்யும் செயல்கள் எதுவாயினும் அது நன்மை பயக்காது என்பதனைச் சுட்டியே, அவ்வாறான நடைமுறைகளை ஆலயங்களில் தவிர்க்கக் கூறுகின்றார்கள்.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: