free website hit counter

ஆலயமே ஆண்டவனாகாது : சுவாமி விவேகானந்தர்

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவாமி விவேகானந்தர் ஆன்மீக சொற்ப்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான்."ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும் ?
ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று.

கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவனிடம் கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ? என்று விவேகானந்தர் கேட்டார். அவன் ஓடிப் போய் ஒரு செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான். சுவாமி அவனிடம் கேட்டார் நான் தண்ணீர்தானே கேட்டேன் எதற்கு இந்த செம்பு.?

செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா ?  குழம்பிப் போனான். அது எப்படி முடியும்? என்று கேட்டான்.

 

இப்போது பதில் சொன்னார் சுவாமி. ஆம் சகோதரனே ! தண்ணீரைக் கொண்டுவர செம்பு தேவைப் படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா ?
அதுதான் ஆலயம். ஆனாலும் செம்பே தண்ணீர் ஆகாது. அதுபோலவே ஆலயமே ஆண்டவனாகாது.

எவ்வளவு சிந்திக்க வைக்கும் ஆழமான எடுத்துக்காட்டு !

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction