free website hit counter

தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நாயக நடிகர் விஷாலும், நடிகை சாய் தன்ஷிகாவும் திருமணம் செய்யவுள்ள செய்தி வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 23வது படமான ‘மதராசி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெறும் என்றும், படத்தின் குழுவினர் ஏற்கனவே அண்டை தீவு நாடான இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாகவும் இந்திய மீடியா டிடி நெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, கோடம்பாக்க வட்டாரம் ஒன்று, “சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் ஆகியோர் பங்கேற்கும் ஒரு தீவிரமான க்ளைமாக்ஸ் காட்சியை படமாக்கவுள்ளனர். படக்குழு 15 முதல் 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவுள்ளது. இத்துடன் படப்பிடிப்பு முடிவடைந்து, மதராசி போஸ்ட் புரொடக்‌ஷன் கட்டத்தில் நுழையும்” என்று தெரிவித்துள்ளது.

படம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டுள்ளது.

மதராசி படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2024 இல் தொடங்கி சென்னை, புதுச்சேரி மற்றும் தூத்துக்குடியில் படமாக்கப்பட்டுள்ளது.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இதற்கு சுதீப் இளமன் ஒளிப்பதிவு செய்கிறார். மதராசி படத்தில் பிஜு மேனன், ஷபீர் கல்லரக்கல் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். (DD Next)

திருப்பதி ஏழுமலையான் நாமத்தை கேலி செய்வது போன்று, சந்தானம் நடிப்பில் உருவான  'டிடி நெக்ஸ்ட் லெவல்'  திரைப்படத்திலுள்ள  பாடலினை நீக்க வேண்டும்  என ஜனசேனா கட்சி கடுமையான எதிர்ப்புத் தெரதிவித்து, வழக்குத் தொடுத்திருந்த நிலையில், தற்போது சர்ச்சைக்குரிய அப்பாடல் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

நடிகை கௌதமி தனக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  மனு கொடுத்துள்ளார்.

ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பாடகி கெனிஷாவுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வெளியாகின.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் இன்னும் 100 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு ஸ்பெஷல் வீடியோவை பகிர்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல் நல பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67.

நாம் ஜெயித்தோமா இல்லையா என்பதை மற்றவர்கள் சொல்லக் கூடாது, நாம் தான் சொல்லவேண்டும்” என்று திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு சென்றாலும் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து படங்கள் நடிக்க வேண்டும் என நடிகர் சசிகுமார் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒரு போராளி, காஷ்மீரில் அவர் அமைதியை கொண்டு வருவார் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். உலக ஆடியோ விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES 2025) மும்பையில் நடைபெற்றது.

செல்போன் யுகத்தில் இளைஞர்கள், சில பெரியவர்கள், பாரத நாட்டின் சம்பிரதாயம், கலாசாரத்தின் அருமை பெரிமை தெரியாமல் உள்ளனர் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …