சபரிமலை யாத்திரையை 'புனித யாத்திரை' என இலங்கை அரசு பிரகடனம் செய்துள்ளது. இதற்காக அறிவிப்பு, அரச வர்தமானியில் யிடப்பெற்றுள்ளது.
சபரிமலையாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களின் நீண்டநாட் கோரிக்கையாகவும், விருப்பமாகவும் இருந்த 'புனிதயாத்திரை' பிரகடனம், புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சின் ஆலோசனைப்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கா அவர்கள் பரிந்துரை செய்ய, அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த அங்கீகாரம் அரச வர்தமானியில் அரச பிரகடனமாக வெளியிடப்பெற்றுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, இலங்கையிலிருந்து சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
