free website hit counter

3-வது வீரராக அதிவேகமாக 6 ஆயிரம் ரன்னை கடந்த லோகேஷ்ராகுல்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ கேப்டன்
லோகேஷ் ராகுல் 30 ரன் எடுத்தார்.

இதன்மூலம் சர்வதேச ஐ.பி.எல். போட்டி உள்பட 20 ஓவர் கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்னை கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார். அவர் 179 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார்.

இதற்கு முன்பு விராட் கோலி 184 இன்னிங்சில் 6 ஆயிரம் ரன்னை கடந்து இருந்தார். அவரை லோகேஷ் ராகுல் முந்தினார். ஒட்டுமொத்தமாக 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்னை கடந்தவர்களில் லோகேஷ் ராகுல் 3-வது வீரர் ஆவார்.

முதலிடத்தில் வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ்கெய்ல் (162 இன்னிங்ஸ்), 2-வது இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆசம் (165 இன்னிங்ஸ்) உள்ளனர்.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் முதலிடத்தில் விராட்கோலி 3296 ரன்னுடன் உள்ளார். 2-வது இடத்தில் ரோகித்சர்மா (3313 ரன்), 3-வது லோகேஷ் ராகுல் (1831 ரன்) உள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction