free website hit counter

நேற்று மாலையும், இன்று முற்பகலும் புதிய பாப்பரசர் தெரிவாகாத நிலையில், இரண்டு தடவைகள் கரும்புகையைக் கக்கிய சிஸ்டைன் சேப்பல் புகைபோக்கி, இன்று மாலை 6.10 மணிக்கு, வெண்புகையை வெளியிட்டு, புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுத்ததை உலகுக்கு அறிவித்தது. புதிய போப் தெரிவானதை உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் மணிகள் ஒலித்து வரவேற்றன. 

கத்தோலிக்கத் திருச்சபையின் 266வது புனித பாப்பரசரான போப் பிரான்சிஸ் அவர்கள் ஏப்ரல் 21ந் திகதி மறைந்ததைத் தொடர்ந்து, எப்ரல் 26ந் திகதி அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் தெற்கு பிரான்சின் பகுதிகளில் இன்று 28.04.25 பிற்பகல் முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த திங்கட்கிழமை, ஏப்ரல் 21, ஈஸ்டர் திங்கட்கிழமை அன்று காலை, தனது 88 வயதில் காலமான போப் பிரான்சிஸுக்கு வத்திகானில் இறுதி இறுதிப் பிரியாவிடை நடைபெற்றது.

கத்தோலிக்கத் திருச்சபையின் புனித பாப்பரசரான போப் பிரான்சிஸ் மறைந்தார் . நேற்று ஈஸ்டர் கொண்டாட்டத்தின் போது, ​​செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் தோன்றி, அருளாசிகள் நல்கிய அவர், இன்று காலையில் உயிர் நீத்தார் எனும் செய்தியை, வத்திகான் செய்திகள் X தளத்தில் பதிவு செய்துள்ளதை மேற்கோள் காட்டி ஐரோப்பியச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜேர்மனிய ஜனாதிபதி Frank-Walter Steinmeier வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை பிப். 23ல் நடத்த உத்தரவிட்டார். அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் கூட்டணி சரிந்ததை அடுத்து, நாட்டின் பிரச்சினைகளை சமாளிக்கும் திறன் கொண்ட ஒரு நிலையான அரசாங்கத்தை வழங்குவதற்கான ஒரே வழி இதுதான் என்று கூறினார்.

ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான ஆயுட்காலம் கொண்ட பெரியவர்கள் தங்கள் வாழ்நாளை முடிக்க ஆதரவளிக்கும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்ததன் மூலம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உதவியாளர் இறப்பை சட்டப்பூர்வமாக்குவதற்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

மற்ற கட்டுரைகள் …