சுவிற்சர்லாந்து இயற்கை அழகுக்குப் பிரபலமான நாடாக இருந்தாலும், அதன் கலாச்சார விழாக்களும் அதே அளவுக்கு கவர்ச்சிகரமானவை. அவற்றில் முக்கியமானவை கார்னிவல் (Carnival) அல்லது Fasnacht / Fasching எனப்படும் மகிழ்ச்சி நிறைந்த திருவிழாக்கள்.
லெண்ட் (Lent) தொடங்குவதற்கு முன் நடைபெறும் இவ்விழாக்களில் மக்கள் வண்ணமயமான உடைகள் அணிந்து, முகமூடிகள் போட்டு, இசை மற்றும் நடனத்துடன் தெருக்களில் கொண்டாடுகின்றனர். இது மகிழ்ச்சி, நகைச்சுவை மற்றும் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு பாரம்பரிய கலாச்சார நிகழ்வாகும்.
பெப்ரவரி மாதத்தில், சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் பிரபலமான கார்னிவல்கள் வருமாறு;
பாசல் கார்னிவல் (Basler Fasnacht)
பாசல் நகரின் Fasnacht, சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய மற்றும் உலகப் புகழ்பெற்ற கார்னிவல் ஆகும்.
சிறப்பம்சங்கள்:
அதிகாலை 4 மணிக்கு “Morgestraich” நிகழ்வுடன் தொடங்கும், விளக்குகள் அணைக்கப்பட்ட நகரத்தில் விளக்குக் காட்சிகள், மற்றும் பிக்கோலோ இசை, அரசியல் நகைச்சுவை உடைகள், பெரிய முகமூடிகள், மூன்று நாட்கள் தொடரும் கொண்டாட்டம். இந்த விழா யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

லூசேர்ன் கார்னிவல் (Lucerne Fasnacht)
லூசேர்ன் Fasnacht மிகவும் கலகலப்பானதும் இளைஞர்களுக்குப் பிடித்ததுமான விழா. இதன் சிறப்பம்சங்கள்; “Fritschi” என்ற பாரம்பரிய கதாபாத்திரம், Guggenmusik இசைக்குழுக்கள், தெரு ஊர்வலங்கள், இரவு கொண்டாட்டங்கள், வண்ணமயமான அலங்காரங்கள். இது ஒரு பெரிய தெரு விழா போல மகிழ்ச்சியுடன் நடைபெறும்.
பேர்ன் கார்னிவல் (Bern Fasnacht)
தலைநகர் பேர்னில் நடைபெறும் Fasnacht குடும்பங்களுக்கு ஏற்ற அமைதியான சூழலுடன் அமைகிறது. சிறப்பம்சங்கள்;
கரடி (Bear) வடிவ வேடங்கள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகள்,
சூரிக் கார்னிவல் (Zurich Fasnacht)
சூரிக் Fasnacht நவீன கலை மற்றும் கலாச்சார அம்சங்களால் சிறப்பாக உள்ளது. இதன் சிறப்பம்சங்கள்; தெரு நாடகங்கள்,
இசை நிகழ்ச்சிகள், சமூக விழிப்புணர்வு நிகழ்வுகள்,
பெலின்சோனா ரபடான் கார்னிவல் (Bellinzona Rabadan Carnival – Ticino)
சுவிட்சர்லாந்தின் இத்தாலிய மொழி பேசும் டிசினோ (Ticino) மாநிலத்தில், பெலின்சோனா நகரில் நடைபெறும் Rabadan கார்னிவல் மிகவும் பிரபலமானது. “Rabadan” என்ற சொல் “சத்தமுள்ள கொண்டாட்டம்” என்று பொருள் தருகிறது. இதன்சிறப்பம்சங்கள்; ஒரு வாரம் நீளும் திருவிழா. பெரிய அலங்கரிக்கப்பட்ட ஊர்வல வாகனங்கள் (Floats), முகமூடி அணிந்த வேடக்காரர்கள், இசை, நடனம், தெரு உணவுகள், “கிங் Rabadan” (திருவிழா மன்னர்) தேர்வு .இத்தாலிய கலாச்சாரத்துடன் கலந்த உற்சாகமான சூழல்
இந்த விழா தெற்கு சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கார்னிவலாகக் கருதப்படுகிறது. இது மற்ற நகரங்களை விட அதிகமாக பார்ட்டி சூழலுடனும், இசை மற்றும் நடனத்துடனும் நடைபெறும்.
கார்னிவல்களின் பொதுவான அம்சங்கள்
சுவிட்சர்லாந்தின் எல்லா கார்னிவல்களிலும் காணப்படும் பொதுவான அம்சங்கள்:
வண்ணமயமான உடைகள்?, முகமூடிகள் மற்றும் வேடங்கள், தபலங்கள் மற்றும் பித்தளை இசைக்குழுக்கள் தெரு உணவுகள், மகிழ்ச்சி, சிரிப்பு, சமூக ஒற்றுமை.
சுவிட்சர்லாந்தின் கார்னிவல்கள் ஒவ்வொரு பகுதியின் மொழி மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன.
பாசல் – பாரம்பரியமும் ஒழுங்கும்
லூசேர்ன் – உற்சாகமும் இசையும்
பெர்ன் – குடும்ப நட்பு சூழல்
சூரிக் – கலை நயம்
பெலின்சோனா – இத்தாலிய பாணி கொண்டாட்டம்
இந்த எல்லா விழாக்களும் சேர்ந்து சுவிற்சர்லாந்தின் பல்துறை கலாச்சார அழகை வெளிப்படுத்துகின்றன. ஒருமுறை இவற்றில் நேரில் கலந்து கொண்டால், அந்த மகிழ்ச்சியை மறக்க முடியாது!
