தமிழகத்தை உலுக்கிய கோவை மாவட்டம் பொள்ளாச்சி,கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் உடனடி போர் நிறுத்தம் அறிவித்தன !
சில நாட்களாக நடந்த தொடர் இராணுவ மோதல்களுக்குப் பின் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்கின்றன.
மருந்துகள், உணவு தானியங்களுக்கான கொள்முதல் செய்ய அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை - மத்திய அரசு
போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களை செயல்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு இந்திய அரசு உத்தரவு
பாகிஸ்தான் படங்கள் காட்சிப்படுத்துவதை நிறுத்துமாறு OTT தளங்களுக்கு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானை தாயகமாக கொண்ட ஃபவாத் கான், மஹிரா கான், ஹனியா அமீர், அதிஃப் அஸ்லம் உள்ளிட்ட நடிகர்களின் சமூக வலைத்தள கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவை கிடைப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும் - இந்திய அரசு அறிவுறுத்தல்
பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லையை ஒட்டிய மாநிலங்களின் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்திய எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் எல்லையோர கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பீரங்கிகள் மூலம் இந்தியர்களை மீது குண்டு வீசித் தாக்கியதில் குழந்தைகள் உட்பட 15 உயிரிழந்தனர்.
இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை மூடியது இந்தியா
இந்திய வான்வெளி வழியே பாகிஸ்தானுக்கு செல்லும் 25 விமான வழிகளை இந்தியா மூடியுள்ளது. இதுபற்றி அதிகாரிகள் கூறும்போது, அடுத்த உத்தரவு வரும் வரை, பாகிஸ்தான வான்வெளிக்குள் நுழைய கூடிய 25 விமான வழிகள் மூடப்பட்டு உள்ளன.