மக்கள் ஏமாற்றப்படமாட்டார்கள் என மீண்டும் ஒரு புதுக்குரல் இலங்கைப் பாராளுமன்றத்தில் ஒலித்திருக்கிறது. இந்தக் குரலின் மீது நம்பிக்கை கொள்வதா வேண்டாமா? எனும் சந்தேகத்துடனேயே இதனை பார்க்க வேண்டிய கட்டாயத்தை கடந்தகால ஆட்சிகளின் அரசியல் மக்களுக்குத் தந்திருக்கிறது.