free website hit counter

சித்திரை புத்தாண்டிற்கு முன் தமிழகத்தில் தேர்தல் 

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2வது வாரத்தில், தேர்தல் நடைபெறாம் எனத் தெரிய வருகிறது.

பலரும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இந்தத் தேர்தல், குறிப்பாக சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னதாக, ஏப்ரல் 13ந் திகதியளவில்,  ஒரே கட்டமாக  நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழகத் தேர்தல் திகதி  இம்மாத இறுதியில் அல்லது மார்ச் மாத முற்பகுதியில்  அறிவிக்கப்படலாம் எனவும், தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆயத்த ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக, நாளை புதன்கிழமை துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துரு சென்னை வரவுள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழகம் தவிர மேலும், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கும்,  வரும் ஏப்ரல், மே, மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதாகவும் அறியவருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula