உலகின் வெப்பமான நகரங்களின் உலக தரவரிசையில் முதலிடத்தில் குவைத்தின் தலைநகரான குவைத் நகரம் உள்ளது, இந்நகரில் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று 49°C ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அது 49.9 °C உயர்ந்துள்ளது.
இரு தரப்பினரும் போர் நிறுத்தத்தை மீறுவதாக டிரம்ப் கூறுகிறார்
செவ்வாய்க்கிழமை, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார். தெஹ்ரான் மீது புதிய பெரிய தாக்குதல்களுக்கான திட்டங்களை அறிவித்த இஸ்ரேல் மீது அவர் குறிப்பாக விரக்தியை வெளிப்படுத்தினார்.
இஸ்ரேலும் ஈரானும் முழுமையான போர்நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் "முழுமையான போர்நிறுத்தம்" ஒன்றை டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அறிவித்துள்ளார்.
ஈரான் அனுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்கத் தாக்குதல் அச்சம் தருகிறது - ஐ.நா பொதுச்செயலாளர்
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்க குண்டுவீச்சுத் தாக்குதல் குறித்து, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பு கவுன்சிலிடம் அச்சம் தெரிவித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைத்த மறுநாள் ஈரான் மீது குண்டுவீச்சு நடத்தியதற்கு பாகிஸ்தான் கண்டனம்
இந்தியாவுடனான சமீபத்திய நெருக்கடியைத் தணித்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் என்று கூறிய 24 மணி நேரத்திற்குள், ஈரான் மீது குண்டு வீசியதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை பாகிஸ்தான் கண்டனம் செய்தது.
இரான் மீதான தாக்குதல் உலகின் வெற்றி - அமெரிக்க அதிபர் டிரம்ப்
இரான் இஸ்ரேலின் ஒரு வார காலத்திற்கும் மேலான தாக்குதகளில், நேற்றிரவு அதிரடியா நுழைந்தது அமெரிக்கா.
ஈரானிய அணுசக்தி நிலையங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன - டொனால்ட் டிரம்ப்
ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கியதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை தெரிவித்தார், மேலும் சமாதானத்திற்கு உடன்படவில்லை என்றால் தெஹ்ரான் மேலும் தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.