free website hit counter

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய ஆயுதப் படைகளில் அதிகபட்ச எண்ணிக்கையிலான படைவீரர்களின் எண்ணிக்கையை 170,000 பேரால் அதிகரிப்பதற்கான ஆணையில் கையெழுத்திட்டுள்ளார் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

வங்கதேச கிரிக்கெட் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நாட்டின் 12வது நாடாளுமன்றத் தேர்தலில் தனது சொந்த மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார், ஜனவரி 7 ஆம் தேதி இத்தேர்தல் திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேஸ் - ஹமாஸ் போர் நிறுத்தம் நேற்றுக் காலை நடைமுறைக்கு வந்ததினைத் தொடர்ந்து, மாலையில் கைதிகள் பரிமாற்றமும் நடந்துள்ளது.

அக்டோபர் 7ம் திகதி தாக்குதல்களுக்குப் பின், காசாவில், நடைபெற்று வரும் பெரும் மோதல்கள், பலகட்டப் பேச்சுவார்த்தைகளின் பின் இருதரப்பும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டுள்ளன.

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர்ச்சியாகவும், வெளிப்படையாகவும் மேற்கொள்ளும் சட்டவிரோதமான தாக்குதல்கள் காசாவின் சுகாதார அமைப்பை தொடர்ந்து அழித்து வருகின்றது.

காசாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை கொல்லப்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ்,எச்சரித்துள்ளார்.

பணயக் கைதிகளை விடுவிக்காமல் போர் நிறுத்தம் இல்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …