உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவுடன் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக ஜெனிவாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்துமாறு சுவிஸ் ஜனாதிபதி இக்னாசியோ காசிஸிடம் கேட்டுக் கொண்டுள்ளார் என சுவிஸ் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, இன்று மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தில் பங்கேற்றுகம் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மத்திய வெளியுறவுத்துறை (FDFA) அமைதி சந்திப்பு பற்றிய செய்தி அறிக்கைகளை உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சுவிஸ் அதிபர் காசிஸ் மற்றும் ஜெலென்ஸ்கி இருவரும் வார இறுதியில் ஒருவருக்கொருவர் பேசியதாக ட்வீட் செய்ததை வைத்தே செய்தி நிறுவனங்கள் இந்த ஊகத்தை வெளியிட்டுள்ளன.
ரஷ்யா - உக்ரைன் பேச்சுவார்த்தை இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது என மற்றுமொரு செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.உக்ரைனுடனான பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரின் நலனுக்காகவும் "ஒரு உடன்பாட்டை எட்டுவதில்" ரஷ்யா ஆர்வமாக உள்ளது என்று ரஷ்ய பேச்சுவார்த்தையாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி கூறினார். பிரதிநிதிகள் உக்ரேனிய-பெலாரஷ்யன் எல்லைக்கு அருகில் சந்திக்க தயாராகி வருகின்றனர். இதற்கான ஆயத்தங்கள் எல்லாம் தயாராகஉள்ள நிலையில், உள்ளூர் நேரப்படி நண்பகல் 12 மணிக்கு (சுவிட்சர்லாந்தில் காலை 10 மணிக்கு) பேச்சுவார்த்தை தொடங்கும் என்று மெடின்ஸ்கி உறுதி செய்தார்.
அமெரிக்க இராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை !
இதேவேளை ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை சுவிற்சர்லாந்தின் 52 சதவீத மக்கள் ஆதரிக்கவில்லை என லிங்க் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நெருக்கடியில் பெடரல் கவுன்சில் நிதானத்துடன் செயல்படுகிறது என்பதை வாக்களிக்கப்பட்டவர்களில் 45 சதவீதம் பேர் வரவேற்றுள்ளனர் எனவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கடந்த நான்கு நாட்களில் சுமார் 3 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.