free website hit counter

கோவிட்-19 இற்கு எதிராக வெள்ளைப்பூடு சூப் மற்றும் HCQ sulfate மருந்து பாவிப்பது குறித்து ஒரு பார்வை

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அண்மையில் இந்திய வாட்ஸ் ஆப் குழுக்களுக்கு இடையே கோவிட்-19 தொற்றில் இருந்து மீளப் பின்வரும் மருந்து முறைகள் உதவும் என்று செய்திகள் பரவியிருந்தது

இது குறித்த சரியான விளக்கத்தை Advanscience தளத்தின் சீன மருத்துவ நிபுணர் குழுக்கள் தெரிவித்துள்ளனர். அந்த விளக்கம் வருமாறு :

சீனப் பாரம்பரிய வைத்திய முறைப்படி கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப் பட்டர்கள் அதன் தாக்கத்தின் வீரியத்தைக் குறைத்துக் கொள்ள புதிதாக சூடாக்கப் பட்ட வெள்ளைப் பூடு நீர் உதவும் என சீன வைத்தியர் ஒருவர் நிரூபித்துள்ளார். மேலும் இந்த வெள்ளைப்பூடு சூப் பல நோயாளிகளுக்குக் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைப்பூடின் தோலை அகற்றி விட்டு 8 நறுக்கப் பட்ட பூண்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். சுமார் 7 கோப்பை தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் இந்த வெள்ளைப் பூடுகளை இட்ட பின்பு மிதமான சூட்டில் இந்த நீரைப் பருகியும், பூண்டை உட்கொள்ளவும் செய்யுங்கள்.. ஒரே நாள் இரவில் உங்களது உடல் நலத்தில் சற்று முன்னேற்றம் ஏற்படும். வெள்ளைப்பூடில் உள்ள சல்ஃபர் என்ற பதார்த்தம் எமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் என்பது மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே இந்தப் பாரம்பரிய முறை சாதாரண காய்ச்சலுக்குப் பலன் அளிக்கும் என்றாலும் நவீன கோவிட்-19 தொற்றினால் ஏற்படும் நிமோனியா காய்ச்சலை இது முற்றிலும் தடுத்து நிறுத்தாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் HCQ சல்பேட் என்ற மருந்து வில்லையையும் கோவிட்-19 வைரஸினால் ஏற்படும் தொற்றினை சற்று தடுக்கக் கூடியது எனப்படுகின்றது. ஆனால் இதனைப் பொதுமக்கள் பாவனைக்குப் பயன்படுத்த முடியாது. அதற்கான காரணம் இது நோய் எதிர்ப்புச் சக்தியினைப் பாதிக்கும் Covid-19 போன்ற நோயாளிகளுக்கு எதிராக கடுமையான சவாலுடன் போராடும் மருத்துவர்களும், அந்த நோயாளிகளைக் கவனிப்பவர்களும் தமக்கு வைரஸ் தொற்று ஏற்படாது இருக்கப் பாவிக்க பரிந்துரைக்கப் படுவது தான். இதனைப் பரிந்துரைக்கும் ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, சாதாரண பொது மக்கள் இதனை ஏன் பாவிக்கக் கூடாது எனப் பின்வரும் பக்க விளைவுகளைக் கூறுகின்றனர் :

தலைவலி, தலைச்சுற்றல், பசியின்மை, குமட்டல், வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி, தோல் அரிப்பு. இது அதிகப்படியான அளவு வலிப்புத் தாக்கங்களுக்கு இம்மருந்து வழிவகுக்கும் அல்லது நோயாளி மயக்கமடைவார் என்பதாகும

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula