free website hit counter

சூரியனும் சந்திரனும் ஒன்றாகச் சேரும் நாளை  அமாவாசை தினம் என்கிறோம். அமாவாசை தினங்களில் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும் என்பது சாஸ்திர மரபு.

 ஆடி மாதம் சுப காரியங்கள் தொடங்குவதற்கு உகந்தது அல்ல என்பது தமிழ் மக்களிடத்தில் தொடரும் மரபு. அப்படியானால் ஆடி மாதம் தோஷம் நிரம்பியதா எனும் சந்தேகங்களும், கேள்விகளும் எழுவதும் இயல்பு. இதன் உண்மை நிலைதான் என்ன?

கதிர்காமக் கந்தனின் புகழ் பரப்பும் முகமாக கொழும்பில் "கதிரைவேற் பெருமானே கருணை தேவே" எனும் நாட்டிய நாடக பெருவிழா இடம்பெறவுள்ளது.

ஆனி உத்தரத்தன்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடனத் திருக்கோலம் மற்றும் சபை ஆடல் சிறப்பாக நடைபெறும். சிதம்பரத்தில் நடராஜர் “சபையில்” ஆடுவதை அனுபவிப்பது, ஆன்மிக ரீதியில் சிதம்பர ரகசியத்தை உணர்வதற்கான வாய்ப்பாகக் கருதப்படுகிறது. சபையின் பின் பக்கத்தில் உள்ள ரகசியம் என்பது "அறிவின் தூய தன்மை" (space or consciousness) என்பதை உணர்த்துகிறது.

யாழ்ப்பாணம் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தின் இரண்டாவது  குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்  01.05.2025 இரவு 9 .40 மணியளவில்  சிவசாயுச்சியம் பெற்றார்.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 71 ஆம் பீடாதிபயாக கணேஷ சர்மா திராவிட் அவர்கள் சந்நியாச தீட்சை பெற்று, ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளாக எழுந்தருளினார்.

மற்ற கட்டுரைகள் …