இந்தியாவின் 77 வது குடியரசு குடியரசு தின விழாவை முன்னிட்ட சிறப்பு நிகழ்வுகள், தலைநகர் டெல்லி கடமைப் பாதையில் நடந்தன. ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி, விழாநிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, விமானப்படை வானில் ஹெலிகாப்டர்களில் மலர்கள் தூவப்பட்டன. தேசியக் கொடி ஏற்றலைத் தொடர்ந்து இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பும், நிலங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், அலங்கார ஊர்த்திகளின் அணிவகுப்பும் நடைபெற்றன. இம்முறை படை அணிவகுப்புக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது ' ஆபரேஷன் சிந்தூர்' ஆயுதப்படையணிகள்.

குடியரசு தின விழாவில் ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் ஆண்டோனியோ லுயிஸ் சாண்டோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இவர்களை வரவேற்ற பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய மந்திரிகள் மற்றும் அதிகாரிகளும், குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

இவ்விழாவில் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்திய வீரரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் , இது தனது "வாழ்நாளின் மரியாதை" என்று கூறி மகிழ்ந்தார்.
