free website hit counter

அமெரிக்க விமானங்கள் இரண்டு விபத்தில் வீழ்ந்தன ?

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈரான் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானங்கள் இரண்டு விபத்துக்குள்ளானது. மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த இரு விமானங்களின் வீழ்ச்சியில், ஒன்றை ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதமேந்திய பிரிவுகளின் ஒரு  குழுவான ஈராக் இஸ்லாமிய எதிர்ப்புக்குழு ‘The Islamic Resistance in Iraq’ , அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானத்தை வீழ்த்தியதற்கு பொறுப்பேற்றுள்ளது

வியாழக்கிழமை மேற்கு ஈராக்கில் ஒரு அமெரிக்க இராணுவ எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளானது எனவும், மற்றொரு விமானமும், நட்புரீதியான துப்பாக்கிச் சூட்டின் விளைவாக  விபத்துக்குள்ளானதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது

அமெரிக்க KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளான பிறகு மீட்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது. இந்த விபத்துக்களில் மற்றொரு விமானமும் KC-135 என்றும், விபத்துக்குள்ளான போது, விமானத்தில் ஆறு சேவை உறுப்பினர்கள் இருந்ததாகவும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி  தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula