free website hit counter

ஈரான் பெண்கள் பள்ளித் தாக்குதல் 'மன்னிக்க முடியாத போர்க்குற்றம்' -ஈரான்

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈரான் தெற்கு நகரமான மினாபில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் பிப்ரவரி 28 அன்று நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை "மன்னிக்க முடியாத" போர்க்குற்றம் என்று வர்ணித்து, பொறுப்பானவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று ஈரான் கோரியுள்ளது.

168 பள்ளி மாணவர்களைக் கொன்றதாகக் கூறும் இந்தத் தாக்குதல் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பகாய் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் தனது X தளத்தில், தெரிவிக்கையில், பிப்ரவரி 28 அன்று மினாப் நகரில் நடத்தப்பட்ட "இரட்டை-தடுப்பு அமெரிக்க டோமாஹாக் ஏவுகணை" தாக்குதல் "168 ஈரானிய குட்டி தேவதைகளைக் கொன்றது" என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இது "தண்டனையின்றிச் செல்லக் கூடாத மன்னிக்க முடியாத ஒரு மோசமான போர்க்குற்றம்" என்று அவர் எழுதினார்.

தெற்கு ஈரானின் ஹார்மோஸ்கானில் உள்ள மினாபில் உள்ள அனைத்து பெண்கள் தொடக்கப் பள்ளியை குறிவைத்த இந்தத் தாக்குதல் தொடர்பாக,  ஈரானிய அரசு தொலைக்காட்சி முன்பு செய்தி வெளியிட்டது. அதன் அறிக்கையின்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 170 க்கும் மேற்பட்டோர் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதேவேளை இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்கருத்துத் தெரிவிக்கையில், "நான் பார்த்தவற்றின் அடிப்படையில், அது ஈரானால் செய்யப்பட்டது" என்று முதலில் கூறியிருந்தார். அன்மையில் ஒரு செய்தியாளர் இது கூறித்துக் கேட்கையில், " அதுபற்றி எனக்குத் தெரியாது " என்றும் கூறியிருந்ததாகச் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula