இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் அதுபற்றி ஆலோசனை செய்யவே, ஆர். எஸ்.எஸ். தலைமைகம் உள்ள நாக்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று அவர் சென்று வந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் கலாச்சார ஆலமரம் ஆர்.எஸ்.எஸ்: நரேந்திர மோடி புகழாரம்
இந்தியாவின் கலாச்சார ஆலமரம் ஆர்.எஸ்.எஸ். என்று அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.- பாஜக இடையே கருத்து வேறுபாடுகளை தணிக்க பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருகிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பு- தவெக பொதுக்குழுவில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், முதல்முறையாக கூடியது. இதில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு பொது வாக்கெடுப்பே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தனது திரைப்படத் துறை பயணத்தை கைவிட்டு அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கி உள்ளார்.
மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்: ஜெய்சங்கர்
புதுடெல்லி: தமிழக மீனவர்களின் விவகாரத்தை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையின் காவலில் தற்போது 97 இந்திய மீனவர்கள் உள்ளனர்: ஜெய்சங்கர்
இலங்கையின் காவலில் தற்போது மொத்தம் 97 இந்திய மீனவர்கள் உள்ளனர், அவர்களில் 83 பேர் தண்டனை அனுபவித்து வருகின்றனர், மூன்று பேர் விசாரணைக்காக காத்திருக்கின்றனர், 11 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்திய நாடாளுமன்றத்தில் (ராஜ்யசபா) தெரிவித்தார்.
காப்பி அடிக்க அனுமதி மறுப்பு; பட்டாசு கொளுத்திப் போட்ட மாணவர்கள்
திருவனந்தபுரம்: பிளஸ் 2 தேர்வில் காப்பி அடிக்க அனுமதி மறுத்ததால் மாணவர்கள் சிலர் ஆத்திரத்தில் ஆசிரியரின் காரில் பட்டாசுகளை கொளுத்திப் போட்ட சம்பவம், இந்தியாவின் கேரள மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது
இந்திய தேயிலை வாரியம் வெளியிட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இந்தியா 254 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது, இதன் மூலம் உலகின் இரண்டாவது அதிக ஏற்றுமதியாளராக மாறியுள்ளது. உலக தேயிலை ஏற்றுமதியில் கென்யா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டாலும், இந்தியா இலங்கையை விஞ்சி இரண்டாவது இடத்தைப் பிடித்தது. 2024 ஆம் ஆண்டில் கென்யா 500 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலையை ஏற்றுமதி செய்தது.