free website hit counter

இந்தியா LVM3-M6 ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உள்நாடு, வெளிநாடுகளின் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஏ.எஸ்.டி. தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான தகவல் தொடர்பு சேவைக்கான புளூபேர்ட்- 6 செயற்கைக்கோளை இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.

விண்வெளியில் இருந்து நேரடியாக ஸ்மார்ட் போன்களுக்கே அதிவேக இணைய சேவையை வழங்குவதுதான் இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கமாகும். இதன் மூலம் செல்போன் டவர்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகளிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளை பெற முடியும்.

புளூபேர்ட்- 6 செயற்கைக்கோள் 6,100 கிலோ எடை கொண்டதாகும். இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட்டான எல்.வி.எம்.3- எம்.6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து காலை 8.55 மணிக்கு பாகுபலி ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

இதன் மூலம் 6,100 கிலோ எடை கொண்ட செயற்கைக்கோளை முதன் முதலாக வெற்றிகரமாக விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்துள்ளது. இதுபோன்ற அதிக எடைகொண்ட செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முன்னதாக பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏவின. தற்போது, இவ்வளவு எடைகொண்ட செயற்கைக்கோளை முதல் முறையாக இஸ்ரோ ஏவியுள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula