திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பில் தொடர்பப்பட்ட வழக்கில், தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கியிருந்த தீர்ப்பை உயர்நீதிமன்றமும் உறுதி செய்து இத் தீர்ப்பினை இன்று அறிவித்துள்ளது.
ராம. ரவிக்குமார் என்பவர் திருப்பரங்குன்ற மலை உச்சியில் அமைந்துள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் எனத் தொடுத்திருந்த வழக்கில், ஏற்கனவே தனிநீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றலாம் எனவும், மனுதாரர் தீபமேற்றுவதற்கான பாதுகாப்பினை வழங்கவேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
ஆயினும் பொது அமைதிக்கு பிரச்னை வரும் எனக் கூறி தீபம் ஏற்ற சென்றவர்களை திருப்பரங்குன்றம் மலையில் ஏறுவதற்கு முன்பே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், 144 தடை உத்தரவை அமல்படுத்தி கூட்டத்தை கலைத்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தனிநீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை மீது இருப்பது அளவீட்டுக் கல் எனவும் நூற்றாண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவில் கல் மண்பத்திலேயே தீபம் ஏற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று
திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில தீபம் ஏற்றலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.
