free website hit counter

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இன்று மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. தலைநகர் கியேவ் நோக்கி முன்னேறும் ரஷ்ய இராணுவப் படைகள் மெலிடோபோல் பகுதியைக் கைப்பற்றியுள்ளன.

உக்ரைன் தலைநகர் கீயேவ் மீது இன்று வெள்ளி அதிகாலை ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் தொடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் நோக்கி முன்னேறும் ரஷ்ய துருப்புக்கள் கியேவிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து, ஒரே நாளில் 100,000 பேர் போரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தப்பி ஓடி அகதிகளாகியுள்ளார்கள் என ஐ.நா. அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான இராணுவ நடவக்கையை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்ததைத் தொடர்ந்து, அங்கோ போர் வெடித்தது. ரஷ்ய துருப்புக்கள் தலைநகர் பகுதிக்குள் நுழைந்துள்ளதை எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் படையினர் உறுதி செய்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த வான் மற்றும் தரைவழித் தாக்குதலையடுத்து, இன்று வியாழக் கிழமை ரஷ்ய தூதரை வரவழைத்தது, இது "நியாயமற்ற மற்றும் தூண்டப்படாத ஆக்கிரமிப்பு" என்று இத்தாலிய பிரதம மந்திரி மரியோ டிராகி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. " உக்ரைன் தலைநகர் கியேவை ஏவுகணைகள் தாக்கும். முழு அளவிலான படையெடுப்பு தொடங்கப்பட்டது." டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தில் எரிபொருட்கள் முதலாக பல்வேறு பாவனைப் பொருட்களின் விலை அதிரடியாக அதிகரித்துள்ள நிலையில், விரைவில் பாற்பொருட்களின் விலையும் அதிகரிக்கும் எனத் தெரியவருகிறது.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction