free website hit counter

உக்ரைனில் சுவிஸ் பத்திரிகையாளர் தாக்கப்பட்டார் - சீனா மத்தியஸ்தம் செய்ய தயார் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைனில் போர் உச்சம் பெற்றிருக்கும் நிலையில், போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான வழிமுறைகளும் திறக்கப்படுகின்றன. இதேவேளை இன்று உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நடைபெறவுள்ளது.

நேற்று ரஷ்யப்படைகளால் முற்றுகையிடப்பட்ட மரியுபோல் நகரத்தை விட்டு, மக்கள் வெளியேற்ற அனுமதிக்கும் தற்காலிக போர் நிறுத்தம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை. நடவடிக்கையின் தோல்விக்கு ரஷ்யர்களும் உக்ரேனியர்களும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இன்றும் மீண்டும் மனிதாபிமான உதவிகள் மற்றும் மக்கள் வெளியேற்றத்திற்கான போர் நிறுத்தத்தினையும் மக்கள் வெளியேறக் கூடிய பாதைகளையும் ரஷ்யா அறிவித்துள்ளது.

இன்று மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ள நிலையில், நேற்று ரஷ்ய ஜனாதிபதி தனது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினார்: உக்ரைனின் "டெனாசிஃபிகேஷன்", அதன் "நடுநிலைப்படுத்தல்", கிரிமியாவின் இணைப்பு மற்றும் டான்பாஸின் சுதந்திரத்தை அங்கீகரித்தல் என்பவை ரஷ்யாவின் கோரிக்கைகளாக உள்ளன.

உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள உக்ரைன், தனது நாட்டிலிருந்து, இறைச்சி, கம்பு, ஓட்ஸ், கோதுமை, சர்க்கரை, தினை மற்றும் உப்பு ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடைவிதித்துள்ளது.

ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து போலந்து எல்லையைத் தாண்டிய உக்ரைனில் இருந்து வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது. போலந்து எல்லைக் காவலர்களின் கூற்றுப்படியும், போலந்து பிரதமரின் அதிபர் மாளிகையில் இருந்து வெளியிடப்பட்ட ஒரு ட்வீட் பதிவின்படியும், 142,300 அகதிகள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் நெருக்கடியில் தேவையான மத்தியஸ்தம் செய்யவும் மற்றும் "சர்வதேச மத்தியஸ்தத்தில்" பங்கேற்கவும் சீனா தயாராக உள்ளது என சீன வெளியுறவு மந்திரி வாங் யீ, பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். "பேச்சுவார்த்தையை எளிதாக்குவதற்கும் அமைதிக்காகவும் ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகிக்கவும் சீனா தயாராக உள்ளது. தேவையான மத்தியஸ்தத்தை மேற்கொள்ள சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதில் தொடர்ந்து ஆக்கபூர்வமான பங்கை வகிக்கவும், ஒரு பெரிய அளவிலான மனிதாபிமான நெருக்கடி தடுக்கவும் சீனா தயாராக உள்ளது" என்று வாங் உறுதியளித்தார்.

இது இவ்வாறிருக்க, சுதந்திர பத்திரிகையாளர் ஒருவர் நேற்று உக்ரைனில் ரஷ்யப்படைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவா புகைப்படக் கலைஞர் குய்லூம் ப்ரிக்வெட் Mykolaiv பகுதியில் காயமடைந்து Kirovograd மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைன் ஊடககங்கள் இதனைத் தெரிவித்துள்ளது.

நிகோலேவ் திசையில் பயணித்த அவரது காரில் "பிரஸ்" என்ற அறிவிப்பு இருந்தபோதிலும், ரஷ்ய ஷாட்களால் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும், தாக்குதலுக்கு உள்ளாகிய அவர், முகம் மற்றும் முன்கையில் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction