free website hit counter

சுவிற்சர்லாந்தில் ஏப்ரல் 1ம் திகதி முதல் கோவிட் - 19 பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமாக தவிக்கபடுவதனால் நாடு முழுமையான இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலியிலுள்ள ரஷ்யர்களுக்குச் சொந்தமான படகுகள் மற்றும் சொகுசு உல்லாச விடுதிகளைக் கைப்பற்றுமாறு உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, நேற்று இத்தாலியப் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் போது, இத்தாலியை வலியுறுத்தினார்.

சுவிற்சர்லாந்தின் கிராஸ் மித்தன் மீது மலை மீது, உலகின் மிகப்பெரிய அமைதிப்புறா பறக்கவிடப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு ஒரு முன்மாதிரியாக யுனிசெஃப் நிறுவனத்தால் இந்த முயற்சி சுவிற்சர்லாந்தின் அல்ப்ஸ் தொடரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ணில் இன்று நடைபெற்ற உக்ரைனுக்கான ஒற்றுமை ஆர்ப்பாட்டத்தில் உக்ரைன்அதிபர் நேரலையில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, " சுவிஸ் மக்களைப் போல் உக்ரேனியர்கள் வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். " என்றார்.

பெப்ரவரி 24 அன்று, ஆரம்பமாகிய உக்ரைன் - ரஷ்ய யுத்தம் மூன்றாவது வாரத்தைக் கடக்கிறது. சில நாட்கள் அமைதியாக இருந்த ரஷ்ய தரப்புத் தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.

உக்ரேனிய துறைமுக நகரமான மரியுபோல் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்ய குண்டுவெடிப்புகள் குறையாத நகரம். இங்கே 500க்கும் அதிகமான மக்கள் அடைக்கலம் பெற்றிருந்த திரையரங்கரத்தின் மீது நேற்று குண்தாக்குதல் நிகழ்ந்துள்ளது.

இத்தாலியில் கோவிட் -19 சுகாதாரக் கட்டுப்பாடுகளை படிப்படியாக எளிதாக்கும் திட்டங்களைக் கொண்ட நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆணையில் இத்தாலிய அரசாங்கம் நாளை வியாழக்கிழமை கையெழுத்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: