free website hit counter

உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யப்படைகள் !

ஐரோப்பா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உக்ரைன் மீதான ரஷ்யப்படையெடுப்பு ஆரம்பமாகி, மூன்று வாரங்களை நெருங்கவுள்ள நிலையில், சில தினங்கள் அமைதி காத்த ரஷ்யத் துருப்புக்கள் மீண்டும் கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளதாகச் செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், தலைநகர் கீவ் மீது குண்டுவெடிப்புக்கள் தொடர்ந்ததுடன் பல உக்ரேனிய நகரங்களில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தவண்ணம் இருந்தன. இதிலே இதுவரை ரஷ்யாவின் முன்னேற்றத்திலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாகக் கருதப்பட்ட உக்ரைனின் மேற்குப்பகுதியிலும் நடு இரவில் சைரன்கள் ஒலித்தன.

கியேவ் இன்டிபென்டன்ட் செய்திகளின் படி, இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் லிவிவ் நகரிலும் ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றுள்ளமை பதிவாகியுள்ளன. இங்கு வெடித்த குண்டுகளின் அதிர்வுகள் போலந்து எல்லைகளிலும் உணர முடிந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தலைநகர் கியேவ் ரஷ்யப்படைகளால் பெருமளவில் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தற்காலிக போர்நிறுத்த நடவடிக்கைகளுக்குத் நன்றி தெரிவித்த உக்ரேனிய தரப்பு ஆதாரங்களின்படி, குறித்த போர்நிறுத்த காலத்தில் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடிந்தது எனவும் இதுவரை 40,000 தொன் உதவிகள் நாட்டிற்கு வந்துள்ளனஎன்றும் தெரிவிக்கப்படுகின்றன.

இதனால் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு பற்றாக்குறை இல்லை என்ற போதிலும், மாவு, ரவை, இறைச்சி, முட்டை, எண்ணெய், சர்க்கரை மற்றும் பிற அடிப்படை பொருட்கள் போன்ற பொருட்களின் ஏற்றுமதியை உக்ரைன் தடை செய்துள்ளது.

ரஷ்ய ஆயுதப்படைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உக்ரைனின் மேற்குப் பகுதியிலுள்ள Ivano-Frankivsk விமான தளத்தைத் தாக்கின. போலந்தின் எல்லைக்கு அருகில் உள்ள உக்ரேனிய நகரமான எல்விவ் நகருக்கு வெளியே உள்ள ராணுவ பயிற்சி முகாம் மீது ரஷ்ய துருப்புக்கள் ஏராளமான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதேவேளை உக்ரைனின் அண்டைநாடுகளில் ஒன்றான மால்டோவாவிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரேனிய நகரமான ஒடெசா மீது ரஷ்ய தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் மால்டோவாவை நோக்கி அகதிகளின் பெரும் வருகையை இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மால்டோவா உக்ரேனிய அகதிகளுக்கு இடமளிக்கும் திறனின் "வரம்பை" நெருங்கி வருகிறது. விரைவில் அகதிகள் வருகையில், அவர்கள் தங்குவதற்கு அல்லது அவர்களை சூடாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க கட்டிடங்கள் இருக்காது. மால்டோவன் வெளியுறவு அமைச்சர் நிகு போபெஸ்கு பிபிசிக்கு அளித்த பேட்டியில் " இநத் நெருக்கடி நிலை மனிதாபிமான சூழ்நிலைக்கு ஒரு முழுமையான பேரழிவாக இருக்கும் " என்று தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில் மால்டோவாவிற்கு சுமார் 100,000 அகதிகள் வந்துள்ளனர், மக்கள் தொகை 4% அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, ஐரோப்பாவில் பெரிதும் அச்சத்தை தோற்றுவித்த செர்னோபில் அணுசக்தி உலைகளைக் குளிர்விக்கும் மின் நிலையம் ஜெனரேட்டர்களுடன் தொடர்ந்து வேலை செய்கிறது. செர்னோபில் அணுமின் நிலையம் இயங்குவதற்கான ஜெனரேட்டர்களுக்கு டீசல் வெளியே இருந்து தருவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச அணுசக்தி முகாமை (Aiea) நன்றி தெரிவித்துள்ளதுடன், அணுமின்நிலையத்தை ரஷ்யா பொறுப்பேற்றதில் இருந்து 211 பணியாளர்கள் பணிச் சுழற்சி இல்லாத நிலையில், அச்சூழலுக்குள் வாழ்வதையும் தெரியப்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula