சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று புதன்கிழமை 33,754 புதிய தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
இது நேற்று முன்தினம் பதிவு செய்யப்பட்ட 23,684 ஐ விட 10,000 அதிகம். கடந்த ஒரு வார காலத்தில் தொற்று விகிதம் 42.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட்டும் நேற்று புதன்கிழமை பிற்பகல் சோதனையில் நேர்மறை காட்டியதால், தனிமைப்படுத்தப்பட்டார். இதேவேளை தொற்று எண்ணிக்கை அதிகரித்த போதும், மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் மற்றும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.