நடிகர் ரோபோ சங்கர் சென்னையில் காலமானார். காலமாகிய அவருக்கு வயது 46.
சிறுநீரக பாதிப்பு, உணவுக்குழாய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேடை நிகழ்ச்சிகளில் ரோபோ வேடமிட்டு டான்ஸ் ஆடியதனால் ரோபோ சங்கர் என அழைக்கப்பட்டார். மதுரையைச் சேர்ந்த இவர், மேடைக்கலைஞராக அறிமுகமாகி, பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதிலிருந்து வெள்ளித்திரை நடிகராகி பல திரைப்படங்களில் நடித்தவர்.
இவரது மகள் இந்திரஜா, மனைவி பிரியங்காவும் கலைஞர்களாக நன்கு அறியப்பட்டவரகள். ரோபோ சங்கரின் இளவயதுப் பிரிவு தமிழ்திரையுலகில் பலமான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.