கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரஸ்வதி , என ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை சரோஜா தேவி காலமானார். உடல்நலக்குறைவினால் இன்று காலமாகிய அவருக்கு வயது 87.
மக்கள் திலகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோருடன் அதிக படங்களில் கதாநாயகியக நடித்தவர் சரோஜாதேவி. பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றிருக்கும் இவர், 2008ல் வாழ்நாள் சாதனையாளருக்கான மத்திய அரசின் தேசிய விருதையும் பெற்றிருந்தார்.
1955ல், அவரது 14 வயதில் திரைத்துறைக்குள் வந்தவர் சரோஜாதேவி. அவரது 50 ஆண்டு காலத் திரையுலக வாழ்வில் இருநூறுக்கும் அதிகமான படங்களில் நடித்தவர் எனும் பெருமைக்குரியவர். சமகால நாயகர்களான விஜய், சூர்யா ஆகியோருடைய படங்களிலும் பின்னாட்களில் நடித்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.