free website hit counter

வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) வட்டி வீதத்தை தற்போதுள்ள 9 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக 2023 ஆம் ஆண்டு முதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நிபந்தனைகளுக்கு உட்பட்டு நீக்குவது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்பர் அஸாம், ஷஹீன் ஷா அப்ரிடி, ஜேம்ஸ் நீஷம், டிம் சவுத்தி மற்றும் இஷ் சோதி போன்ற 400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் திறமையாளர்கள், இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் ஏலத்தில் தங்களை பதிவு செய்துள்ளதாக இலங்கையின் சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்புச் செய்யப் புறப்பட்டவர்கள் இன்றைக்கு நீதிமன்றங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மைக் கட்சியொன்று தன்னுடைய பொறுப்பை மறந்து, தனியார்த்தனமும் சுயநல ஆட்டமும் ஆட முயன்றதன் விளைவை இப்போது சந்தித்து நிற்கின்றது.

தேசிய விடுதலையை வேண்டி நிற்கும் சனக்கூட்டத்தின் அரசியலை முன்னெடுக்கும் தரப்பினர், தங்களுக்குள் பதவிகளுக்காக முட்டி மோதும் போது, அந்தச் சனக்கூட்டத்தின் விடுதலை இலக்குகள் சிதைக்கப்படுகின்றன. அப்படியானதொரு நிலையை, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தாய்க்கட்சி என்று சொல்லக்கூடிய தமிழரசுக் கட்சி இப்போது நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது. அந்தக் கட்சியிடம் எதிர்கால அரசியல் திட்டங்கள் ஏதும் இல்லை. வாக்கு அரசியலின் கட்சியாக தன்னைச் சுருக்கிக் கொள்ளும் செயற்பாடுகள் மட்டுமே காணப்படுகின்றன. 

2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் மீள் ஆய்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று அறிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

new-year-prediction