free website hit counter

கடந்த அரசாங்கம் வாகன இறக்குமதித் தடையை படிப்படியாக நீக்குவதற்கு வழிவகுத்த நிதி நிலைமைகள் அரசாங்க மாற்றத்திற்குப் பின்னரும் மாறாமல் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தினார்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கான செயற்பொறுப்பை கூட்டு முயற்சியாக நிறைவேற்றும் திறன் எமக்கு உள்ளது. அதற்கான மிகத் திறமையான குழு எங்களிடம் உள்ளது. நம் அனைவருக்கும் அது குறித்த முழுமையான உறுதிப்பாடு உள்ளது என ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.  

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரி செலுத்துதல்கள் செப்டம்பர் 30, 2024க்குள் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து வரி செலுத்துவோரையும் உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன்  அவர்கள் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கையில் தடைப்பட்ட 11 திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் அரசாங்கம் உறுதியளித்துள்ளதுடன், புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்கு முழு ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பை (GOR) உயர்த்துவதற்காக உள்நாட்டு சந்தையில் இருந்து கணிசமான அளவு அந்நிய செலாவணியை வாங்கியதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) கூறுகிறது.

இன்று (26) நள்ளிரவு 12.00 மணி தொடக்கம், முன்னைய முறைமையின் கீழ் வீசா வழங்கும் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …