free website hit counter

சமையல் நிகழ்ச்சியால் விளைந்த சாட்டிலைட் யுத்தம் !

சின்னத்திரை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கலக்கப்போவது யாரு? சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர். வில்லேஜ் டு வில்லா, பிக்பாஸ் என பல அதிரடி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வழியாக தமிழ் மக்களின் இதயத்தை வென்று தமிழ்நாட்டின் டி.ஆர்.பியில் முதலிடத்தில் இருக்கிறது விஜய் டிவி.

அதனுடைய நிகழ்ச்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியால மேகா சீரியல்களின் டி.ஆர்.பியை மட்டுமே வைத்து காலம் தள்ளி வருகிறது சன் டிவி. தற்போது ‘சமையல் நிகழ்ச்சி’ ஒன்றினால், இந்த இரண்டு தொலைக்காட்சிகளுக்கு இடையில் சாட்டிலைட் யுத்தம் தொடங்கியிருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பிரபலமான சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. இதுவரை பதினெட்டு சீசன்களைக் கடந்துள்ள இந்நிகழ்ச்சியின் உரிமை புகழ்பெற்ற ஃபாக்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இந்திய பிராந்திய மொழி உரிமைகளை கடும் போட்டிக்கிடையில் பெரும் விலைகொடுத்து கைப்பற்றியுள்ளது சன் டிவி. இதன் தமிழ் மற்றும் தெலுங்கு நிகழ்ச்சி தற்போது பரபரப்பாகத் தயாராகி வருகிறது. இதில் தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி, தெலுங்கு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தமன்னா ஆகியோர் பங்குபெற்றி வருகின்றார்கள். இதில் தமிழ் நிகழ்ச்சியை சன் டிவியும், தெலுங்கு நிகழ்ச்சியை ஜெமினி டிவியும் ஒளிபரப்பவுள்ளன.

இதனால் அரண்டுபோன விஜய் டிவி, தற்போது இந்த நிகழ்ச்சிக்குப் போட்டியாக 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியைத் தமிழாக்கம் செய்து ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இதன் முதல் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியிடப்பட்டுள்ளது, ஏற்கெனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்குப் போட்டியாகவே சன் டிவி நிறுவனம் 'மாஸ்டர் செஃப் இந்தியா - தமிழ்' நிகழ்ச்சியைத் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்குப் போட்டியாக 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியையே விஜய் டிவியின் ஹாட்ஸ்டாரில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருப்பது என்னமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை. பொறுத்திருந்து காண்போம்.

-4தமிழ்மீடியாவுக்காக: மாதுமை

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction