லோகார்னோ திரைப்பட விழாவின் 78 பதிப்பின் இரண்டாம் நாளாகிய ஆகஸ்ட் 07ந் திகதி மாலையிலும், பியாற்சா கிரான்டே பெருமுற்றத்தில் காசாவின் துயரம் நினைவு கூரப்பெற்றது.
முன்னதாக பிற்பகலில் லோகார்னோவின் தெருக்களிலும், பியாற்சா கிரான்டே முகப்பினிலும், பாலஸ்தீன ஆதரவு நிகழ்வுகள் தன்னார்வலர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மாலை, திரையிடல்களுக்கு முன்பு, பியாஸ்ஸா கிராண்டே,பெருமுற்றத்தில், காசாவின் பெருந்துயரை நினைவு கூர்ந்து, ஒரு நிமிடம் முழுமையான மௌனம் காத்தனர். அமைதியான அந்த அர்ப்பணிப்பு நேரத்தில், முழு பார்வையாளர்களும் இரத்தத்தால் கறை படிந்ததைப் போல சிவப்பு அடையாளத்துடன் கூடிய அட்டைகளை உயர்த்திப் பிடித்தனர்.
அமைதி நிறைவடைந்ததும், "பியாஸ்ஸா கிராண்டேயின் இந்த இதயத்துடிப்பினை மதிக்கின்றோம். உலகம் முழுவதும் இந்த விழாவை மிகவும் பிரியப்படுத்துவது இந்த மனிதாபிமான உணர்வுதான். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நன்றி," என லோகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குனர் ஜியோனா ஏ. நஸ்ஸாரோ கூறினார்.
தொடர்ந்து வழமையான விருது வழங்கல்களும், கலைஞர் அறிமுகங்களும், திரையிடல்களும் நடந்தன.
- 4தமிழ்மீடியாவிற்காக: லோகார்னோவிலிருந்து மலைநாடான்
- படங்கள் நன்றி:Locarno Film Festival / Ti-Press
காசாவிற்காக மனிதாபிமான ஆதரவுக் குரலுடன் ஆரம்பமாகியது லோகார்னோ78 திரைப்படவிழா !