free website hit counter

யாழ் சர்வதேச திரைப்பட விழா 2024  நிறைவு !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சர்வதேச  திரை  படைப்பாளர்களுடன் உள்ளூர் படைப்பாளர்களையும் சேர்த்து கௌரவித்து விருதுகளை வழங்கி வைக்கும் நிகழ்வோடு 7 நாட்கள் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ் சர்வதேச திரைப்பட விழா 2024 நேற்று 09ஆம் திகதி நிறைவுற்றது.

சுயாதீன திரைப்படக் கலையை யாழ்ப்பாணத்தில் கொண்டாடும் நோக்கமாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விழாவில், மூத்த மற்றும் இளம் தலைமுறை திரைப்படக் கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக சிறந்த முழுநீள அறிமுகத் திரைப்படம், மிகச் சிறந்த சர்வதேச குறுந்திரைப்படம், சிறந்த இலங்கை குறுந் திரைப்படம், மிகச் சிறந்த ஜனரஞ்சகத் குறூந்திரைப்படத்துக்கான பார்வையாளர் விருது என 05 விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் இந்திய திரைப்பட இயக்குனர், கன்னட சினிமா மற்றூம் இணை சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான கிரிஷ் காசரவல்லி, இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி,  Goethe-Institut Sri Lanka இன் இயக்குனர் Stefan Winkler உள்ளிட்ட விழா குழாமும் முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

அதோடு விழாவின் தொடக்கத்திலே இத்தனை நாட்களும் பின்னால் உழைத்து வந்த அனைத்து தன்னார்வலர்களரான யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு விழாவை சிறப்பித்து தந்தைமைக்காக நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

 இவ்விழாவின் தொடக்க உரையை  யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி வழங்கியிருந்தார். தொடர்ந்து இலங்கையில் 1976இல் வெளிவந்து 100 நாட்கள் ஓடி சாதனைபடைத்த ,ஈழத்து திரைப்படமான  'கோமாளிகள்' திரைப்படத்தின் மூன்று பாடல்களை திரை இசை பாணியில் வழங்கி வந்திருந்த மூத்த பார்வையாளர்களை கவர்ந்தனர். அதனையடுத்து சிறந்த சர்வதேச மற்றும் தேசிய குறுந்திரைப் படங்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு பதிப்பின் போதும் மூத்த தலைமுறைக் கலைஞர்களைப் பாராட்டி கௌரவித்து வழங்கப்பட்டு வரும் வாழ் நாள் சாதனையாளர் விருது, இம்முறை இந்திய திரைப்பட இயக்குனர், கன்னட சினிமா மற்றும் இணை சினிமாவின் முன்னோடிகளில் ஒருவரான கிரிஷ் காசரவல்லி அவர்களுக்கு வழங்கப்பெற்றது.

நான்கு சிறந்த திரைப்படங்கள் உட்பட பதினான்கு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அவரது பாராட்டப்பட்ட கன்னடத் திரைப்படமான கதஷ்ரத்தா, சமீபத்தில் 81வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. கதஷ்ரத்தா, தபரனா கதே, தாயி சாஹேபா மற்றும் த்வீபா ஆகிய திரைப்படங்கள் அவர் புகழ் பேசுபவை. இதில் குறிப்பிட்ட அவரது திரைப்படங்கள் யாழ்.சர்வதே திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.

2024ஆம் ஆண்டின் 10வது பதிப்பை முன்னிட்டு புதிதாக சேர்க்கப்பட்ட போட்டி பிரிவான 'new asian current' எனும் ஆவணப்பட வரிசையில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆவணப்படத்திற்கு விருது வழங்கப்பட்டது. இறுதியாக 10வது பதிப்பை மிக அழகாக எடுத்து சிறப்பித்து தந்த அனைவருக்கு பாராட்டை தெரிவித்து நன்றியுறை ஆற்றிய இத்திரைப்பட திருவிழாவின் இயக்குனர் அனோமா ராஜகருணா அடுத்த 11 வதுபதிப்பிலும் இதேபோல் கலந்துகொண்ட அனைத்துள்ளங்களையும் தான் மீண்டும் எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தார். இறுதியாக ஜேர்மனியின் Die Wannseekonferenz (the Conference) திரையிடலோடு விழா நிறைவுற்றது.

கடந்தமாதம் சங்கானை, வட்டுக்கோட்டை, பருத்தித்துரை ஆகிய பிரதேசங்களில் 10 வது பதிப்பை முன்னிட்டு இலங்கையின் முதல் திறந்தவெளித் திரையிடலை யாழ் சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் வழங்கி இருந்தது குறிப்பிடதக்கது.

விருது பட்டியல்:

சிறந்த பார்வையாளர் விருது - குறும்படம்
Audience Choice Award - Short Films

‘Aasanam‘ by Selvakumar Rinoshan

சிறந்த இலங்கை குறும்படத்திற்கான விருதுகள்
(Best Short Films - National)
 பரிந்துரைகள் (Nominations)

‘Prathi’ by Narthanie Serasinghe
‘Sagavaram’ by Dinesh Balasri
‘Hapoy’ by Udaya Thennekoon
‘This is not a Pearl’ by Tharindu Ramanayake

சிறந்த தேசிய குறும்படத்திற்கான சிலோன் தியேட்டர்ஸ் விருது
(Ceylon Theatres Award for the Best National Short Film)
‘Hapoy’ by Udaya Thennekoon

சிறப்பு நடுவர் தேர்வு 
(Special Jury Mention) 
‘Sagavaram’ by Dinesh Balasri

***
சிறந்த குறும்படங்கள் - சர்வதேசம்
(Best Short Films - International) 
பரிந்துரைகள் (Nominations)

‘A Winter in Blossom’ by Alexander Brunkovsky - Russia
‘The Fisherman’ by Mahdi Zamanpoor Kiasari & 
Manan Janbarai - Iran
‘A Bleak Home’ by Bidushi Giri - Nepal
‘Anna Morphose ‘by João Rodrigues - Portugal

சிறந்த சர்வதேச குறும்படத்திற்கான விருது
(Award for Best International Short Film)
‘A Bleak Home’ by Bidushi Giri - Nepal

சிறப்பு நடுவர் தேர்வு 
(Special Jury Mention) 
‘The Fisherman’ by  Mahdi Zamanpoor Kiasari & 
Manan Janbarai - Iran

***
சிறந்த ஆவணப்பட விருதுகள்
(New Asian Currents - Documentary)

பரிந்துரைகள் (Nominations)
‘Flickering Lights’ by Anirban Dutta & Anupama Srinivasan
‘Beyond the Blues’ by Debalina Majumder
‘Dr. B.R. Ambedkar: Now and Then’ by Jyoti Nisha
‘And, Towards Happy Alleys’ by Sreemoyee Singh

சிறந்த ஆவணப்பட விருது (Award)
‘Flickering Lights’ by Anirban Dutta & Anupama Srinivasan

***
சிறந்த அறிமுக திரைப்பட விருது (Debut Films)

பரிந்துரைகள் (Nominations)
‘Sthal (A Match) by Jayant Digambar Somalkar -  India
‘Koli Esru’ by  Champa P. Shetty - India
‘Gazelle ‘ by Houshang Golkamani - Iran
‘Mon Potongo’ by  Rajdeep Paul & Sarmistha Maiti – India

சிறந்த அறிமுக திரைப்பட விருது (Award)
‘Sthal (A Match) by Jayant Digambar Somalkar -  India

-  யாழிலிருந்து 4தமிழ்மீடியாவிற்காக: ஹரனி

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction