free website hit counter

லொகார்னோ திரைப்பட விழாவின் உயரிய தங்கச் சிறுத்தை விருதை வென்றது லிதுவேனிய சினிமா : Akiplėša (Toxic)

©Locarno Film Festival / Ti-Press

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று மாலையுடன் முடிவுக்கு வந்துள்ள 77 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் மிக உயரிய தங்கச்சிறுத்தை விருதினை (Pardo d’Oro), லிதுவேனியன் இயக்குனர் Saulé Bliuvaité இன் Akiplėša (Toxic) பெற்றுக்கொண்டது. இளம் பருவ வயது பெண்களிடம் (teenage) சமூகம் முன்வைக்கும் எதிர்பார்ப்புக்கள், அழுத்தங்களை அடிப்படையாக கொண்ட இப்புனைவுத் திரைப்படம் லிதுவேனிய சினிமாவிற்கு கிடைத்த முதன்மையான ஒரு அங்கீகாரமாகும். 

சிறப்பு நடுவர் விருதினை Kurdwin Ayub இன் Mond திரைப்படம் பெற்றுக் கொண்டது. இது அதீத செல்வந்த குடும்பம் ஒன்றில் பெண்களுக்கான சுதந்திரம் என்ன என்பதனை கடும்போக்கான இஸ்லாமிய கொள்கைகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரில்லர் வகை படமாகும். சிறந்த இயக்குனருக்கான விருதை Seeses (Drowing Dry) திரைப்படத்திற்காக Laurynas Bareiša பெற்றுக் கொண்டார். 

சிறந்த நடிப்புக்கான விருதையும் அத்திரைப்படம் பெற்றுக் கொண்டது. அதோடு பிரபல தென்கொரிய இயக்குனர் Hong Sangsoo’s இன் Suyoocheon திரைப்படத்திற்காக Kim Minhee வுக்கும் அவ்விருது பகிர்ந்தளிக்கப்பட்டது. முதலவாது அல்லது இரண்டாவது சிறந்த முழு நீளத்திரைப்படத்திற்கான இயக்கத்திற்னாக விருது Holy Electricity திரைப்படத்திற்காக Tato Kotetishili க்கு கிடைத்தது. விருதுகள் வென்ற பல திரைப்படங்கள், மனித காருண்யம் பேசும் சமூக நீதி கொண்ட திரைப்படங்களாகும். 

லொகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குனர் Giona A.Nazzaro இம்முறை லொகார்னோ திரைப்பட விழா குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில், மறுபடியும் லொகார்னோ திரைப்பட விழா, சிறந்ததொரு நாளையை அமைப்பதற்கான நம்பிக்கையை அதிகம் பேசும் படங்களை கொண்டாடியிருக்கிறது. சிறந்த அறிமுக இயக்குனர் விருது, தங்கச்சிறுத்தை விருது, சிறந்த இளம் அறிமுக இயக்குனருக்கான விருது (Denise Fernades), என பல முக்கிய விருதுகள் பெண் இயக்குனர்களுக்கு வழங்கப்பட்டிருப்பது, லொகார்னோ திரைப்பட விழா எந்தளவு மாற்றுச் சினிமாவின் பெண்ணிய குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது என்கிறார்.

மேலும் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தாலும் அனைவரும் ஒன்றாக ஒரு சினிமா உலகில் பயணிக்க முடியும். யுத்தங்களிலிருந்தும், வெறுப்பிலிருந்தும் விலகி நிற்போம். வேற்றுமைகளிலும், ஒன்றாக பயணிக்கும் பக்குவத்தையும், பொறுப்புணர்வையும் காண்பிக்கும் சினிமாக்களை அமைக்கும் கலைஞர்களே, இதிலிருந்து விலகிவிடாதீர்கள். தொடர்ந்து இவ்வாறான படைப்புக்களை உருவாக்குங்கள் என்றார்.  இம்முறை லோகார்னோ சர்வதேச திரைப்பட விழா கொண்டாடிய முக்கிய திரைக்கலைஞர்களில் Shah Rukh Khan, Alfonso Cuaron, Jane Campion, Claude Barras, Irene Jacob, தயாரிப்பாளர் Stacey Sher மற்றும் இசைத்தொகுப்பாளர் Ben Burtt முக்கியானவர்கள். 

விருதுகள் வென்ற படங்களின் முழுத்தொகுப்பு :

Concorso Internazionale 

Pardo d’Oro – Grand Prize of the Festival and City of Locarno 
AKIPLĖŠA (TOXIC) by Saulė Bliuvaitė, Lithuania 

Special Jury Prize – Cities of Ascona and Losone 
MOND by Kurdwin Ayub, Austria 

Pardo for Best Direction – City and Region of Locarno 
to Laurynas Bareiša for SESES (DROWNING DRY), Lithuania/Latvia 

Pardo for Best Performance 
to Gelminė Glemžaitė, Agnė Kaktaitė, Giedrius Kiela, Paulius Markevičius for SESES (DROWNING DRY) by Laurynas Bareiša, Lithuania/Latvia 

Pardo for Best Performance 
to Kim Minhee for SUYOOCHEON (BY THE STREAM) by Hong Sangsoo, South Korea 

Special Mentions 
QING CHUN (KU) (YOUTH (HARD TIMES)) by WANG Bing, France/Luxembourg/Netherlands 
SALVE MARIA by Mar Coll, Spain 
 

Concorso Cineasti del Presente 

Pardo d’Oro – Concorso Cineasti del Presente 
HOLY ELECTRICITY by Tato Kotetishvili, Georgia/Netherlands 

Best Emerging Director Award – City and Region of Locarno 
to Denise Fernandes for HANAMI, Switzerland/Portugal/Cape Verde 

Special Jury Prize CINÉ+ 
KOUTÉ VWA (LISTEN TO THE VOICES) by Maxime Jean-Baptiste, Belgium/France/French Guiana 

Pardo for Best Performance 
to Callie Hernandez for INVENTION by Courtney Stephens, USA 

Pardo for Best Performance 
to Anna Mészöly for FEKETE PONT (LESSON LEARNED) by Bálint Szimler, Hungary 

Special Mentions 
FEKETE PONT (LESSON LEARNED) by Bálint Szimler, Hungary 
KADA JE ZAZVONIO TELEFON (WHEN THE PHONE RANG) by Iva Radivojević, Serbia/USA 

Pardi di Domani 

Concorso Corti d’Autore 

Pardino d’Oro Swiss Life for the Best Auteur Short Film 
UPSHOT by Maha Haj, Palestine/Italy/France 

Special Mention 
GWE-IN ESI JEONGCHE (THE MASKED MONSTER) by Syeyoung Park, South Korea 

Locarno Film Festival Short Film Candidate – European Film Awards 
LA FILLE QUI EXPLOSE by Caroline Poggi and Jonathan Vinel, France 

Concorso Internazionale 

Pardino d’Oro SRG SSR for the Best International Short Film 
WASHHH by Mickey Lai, Malaysia/Ireland 

Pardino d’Argento SRG SSR for the International Competition 
GIMN CHUME (HYMN OF THE PLAGUE) by Ataka51, Germany/Russia 

Pardi di Domani Best Direction Award – BONALUMI Engineering 
QUE TE VAYA BONITO, RICO by Joel Alfonso Vargas, United Kingdom/USA 

Medien Patent Verwaltung AG Award 
THE FORM by Melika Pazouki, Iran 

Special Mention 
FREAK by Claire Barnett, USA 

Concorso Nazionale 

Pardino d’Oro Swiss Life for the Best Swiss Short Film 
SANS VOIX by Samuel Patthey, Switzerland 

Pardino d’Argento Swiss Life for the National Competition 
BETTER NOT KILL THE GROOVE by Jonathan Leggett, Switzerland 

Best Swiss Newcomer Award 
to Gabriel Grosclaude for LUX CARNE, Switzerland 

Special Mention 
PROGRESS MINING by Gabriel Böhmer, United Kingdom/Switzerland 

First Feature 

Swatch First Feature Award 
AKIPLĖŠA (TOXIC) by Saulė Bliuvaitė, Lithuania 

MUBI Award – Debut Feature 
GREEN LINE by Sylvie Ballyot, France/Lebanon/Qatar 

Special Mentions 
HANAMI by Denise Fernandes, Switzerland/Portugal/Cape Verde 
KOUTÉ VWA (LISTEN TO THE VOICES) by Maxime Jean-Baptiste, Belgium/France/French Guiana 
 

Pardo Verde 
Supported by the Ente Regionale per lo Sviluppo del Locarnese e Vallemaggia 

Pardo Verde 
AGORA by Ala Eddine Slim, Tunisia/France/Saudi Arabia/Qatar 

Special Mentions 
DER FLECK by Willy Hans, Germany/Switzerland 
REVOLVING ROUNDS by Johann Lurf and Christina Jauernik, Austria  

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள் 
Photo Copyright: Locarno Film Festival / Ti-Press

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction