free website hit counter

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பிலான நடவடிக்கைககளில் கடற்றொழில் அமைச்சு ஈடுபட்டிருக்கின்றது. இந்திய மீனவர்களின் 50 குதிரை வலுவுக்கும் குறைவான இயந்திரப் படகுகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு வடக்கு கடலில் மீன்பிடிக்க அனுமதிப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதனை செயற்படுத்தும் வேலைகளில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈடுபட்டு வருகின்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் அறிவித்திருக்கிறார். நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நெடுமாறன் பொது நிகழ்வுகளில் பெரிதாக பங்கேற்பதில்லை.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் முடிவினை எடுத்ததன் மூலம், இரா.சம்பந்தன் இதுவரை காலமும் வகித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவி வறிதாகிவிட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அறிவித்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய இறுதி நாட்களை எண்ணத் தொடங்கிவிட்டது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்ததன் மூலம், கூட்டமைப்பிற்கான முடிவுரை எழுதப்பட்டிருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ‘சொப்பன சுந்தரி’யை உதாரணமாக முன்வைத்து ஆற்றிய உரை கவனம் பெற்றிருக்கின்றது. நாட்டின் பிரதான துறைமுகங்களை அரசாங்கம் சீனாவுக்கு தரைவார்த்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்பி உரையாற்றும் போதே, அவர் சொப்பன சுந்தரி விடயத்தை தொட்டார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர் இரா.சம்பந்தனும் வாழ்ந்து கெட்டவர்களின் நிலைக்கு வந்துவிட்டார்கள். அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சு நடத்துவதற்கான அழைப்பை தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் சம்பந்தன் அண்மையில் விடுத்திருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவரின் கொழும்பு வதிவிடத்துக்கு வருமாறு கட்சி தலைவர்களை அழைத்திருந்தார். ஆனால், அந்த அழைப்பை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; பேச்சுக்கு வரவும் இல்லை. குறிப்பாக, சம்பந்தன் தலைமை வகிக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகியவற்றின் தலைவர்கள் கூட பேச்சுக்கு வரவில்லை. 

இலங்கைத் தமிழரசுக் கட்சி மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தையாக அலைக்கழிந்து கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைவராக ‘மேய்ப்பனாக’ இருக்க வேண்டிய மாவை சேனாதிராஜாவோ, அலைக்கழியும் மந்தைக் கூட்டத்தில் வலுவிழந்த ஆடாக அல்லாடுகிறார். கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் தமிழரசுக் கட்சி தன்னைத் தானே அசிங்கப்படுத்தி மக்களிடம் வெளிப்படுத்திக் கொண்ட அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலில் இயங்கும் எந்தவொரு கட்சியும் நடந்து கொண்டதில்லை. 

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: