இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கைக் கதைகளின் புதிய அத்தியாயமாக இடம்பிடித்திருக்கிறார். ஐந்து தசாப்த கால அரசியல் வாழ்வைக் கொண்டிருக்கின்ற ரணில், ஜனாதிபதிக் கனவை ஒவ்வொரு நாளும் கொண்டு சுமந்தார். இரண்டு தடவைகள் ஜனாதிபதித் தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு தோல்வியடைந்த போதிலும், அவர் தனது கனவை அடைவதற்கான அனைத்துச் சந்தர்ப்பங்களையும் பரீட்சித்துப் பார்ப்பதற்கு தயாராக இருந்தார். அதுதான், அவரை காலம் இன்று ஜனாதிபதியாக்கியிருக்கிறது. நம்பிக்கைக் கதைகளில் புதிய நாயகனாகவும் மாற்றியிருக்கின்றது.
கோடி கொடுக்கும் மலை எந்தமலை ? இப்போ கொடுத்த மலை எந்த மலை ?.
கோடி கொடுக்கும் மலை எந்தமலை ? இப்போ கொடுத்த மலை எந்த மலை ?.
கோட்டா - பசிலோடு மோதும் மூவரணி! (புருஜோத்தமன் தங்கமயில்)
விமல் வீரவங்சவையும் உதய கம்மன்பிலவையும் அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் நீக்கியிருக்கின்றார். விமல், கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய மூவர் அணியின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடுப்பகுதியிலேயே எதிர்பார்க்கப்பட்டது.
கனடா குழப்பமும் சுமந்திரனுக்கு எதிரான கோசங்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)
“...எங்களுக்கு அரசியல் தீர்வெல்லாம் தேவையில்லை; தமிழீழம் தான் தேவை. இங்கு வந்து அரசியல் தீர்வு பற்றி நீ(!) பேசத் தேவையில்லை. இதை நீ(!) இலங்கைப் பாராளுமன்றத்துக்குள் பேசு...”
சுமந்திரன் குழுவின் அமெரிக்கப் பயணம் சொல்லும் செய்தி! (புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழுவொன்று எதிர்வரும் சனிக்கிழமை அமெரிக்கா செல்கின்றது. அமெரிக்காவின் அழைப்பின் பேரில் செல்லும் இந்தக் குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனும் முன்னாள் சட்ட விரிவுரையாளரான கலாநிதி நிர்மலா சந்திரஹாசனும் உள்ளடங்குகின்றனர்.
தமிழ்க் கட்சிகளின் யாழ். சந்திப்பு: தமிழர்களை 13க்குள் சுருக்கும் முயற்சியா? (புருஜோத்தமன் தங்கமயில்)
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தும் சந்திப்பொன்று தமிழ் பேசும் கட்சிகளுக்கு இடையில் கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அழைப்பின் பேரில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் பங்குபற்றின. அத்தோடு, மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும், ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸும் பங்கெடுத்தன.
ஒரே நாடு ஒரே சட்டம்: குரங்கு கையில் பூமாலை?! (புருஜோத்தமன் தங்கமயில்)
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்கிற ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துவதற்கான சட்ட வரைபினைத் தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சு ஏற்கனவே தயாரித்து வரும் சட்டத் திருத்தங்களை ஆராய்ந்து கருத்துக்களை முன்வைத்தல் என்கிற விடயங்களுக்காகவே குறித்த ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. 13 அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த செயலணியில் 9 சிங்களவர்களும், 4 முஸ்லிம்களும் அடங்குகின்றனர். தமிழர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.