free website hit counter

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், சாலை விபத்துகளால் ஏறத்தாழ 1.8 லட்சம் பேர் உயிரிழப்பதாக  மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தரும் போது, ​​பன்முகத்தன்மை கொண்ட இந்தியா-இலங்கை நட்புறவை இலங்கையும் இந்தியாவும் மறுபரிசீலனை செய்யும் என்றும், ஒத்துழைப்பின் புதிய வழிகள் குறித்து விவாதிக்கும் என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

சென்னை:  இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்திய அரசு இந்தியா மீட்க வேண்டும் என்று, தமிழ்நாடு சட்டசபையில் புதனன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி:  இந்திய நாடாளுமன்றத்தின்  மக்களவையில், எதிர்க்கட்சிகளில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், வக்பு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. ஆதரவாக 288, எதிராக 232 பேர் வாக்களித்தனர். 

கச்சத்தீவை இலங்கையிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக மற்றும் பாஜக எதிர்க்கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஆதரித்தன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாகவும் அதுபற்றி ஆலோசனை செய்யவே, ஆர். எஸ்.எஸ். தலைமைகம் உள்ள நாக்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று அவர்  சென்று வந்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தியாவின் கலாச்சார ஆலமரம் ஆர்.எஸ்.எஸ். என்று அந்த நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.  ஆர்.எஸ்.எஸ்.- பாஜக இடையே கருத்து வேறுபாடுகளை தணிக்க பிரதமர் மோடி முயற்சி எடுத்து வருகிறார்.

மற்ற கட்டுரைகள் …