காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர்க்கு இந்தியா கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது.
பிரியங்காவுடன் ராபர்ட் வாத்ரா ஆஜர் - 3வது நாளாக அமலாக்கத்துறை விசாரணை
குருகிராம் நில வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ராபர்ட் வாத்ரா, தனது மனைவியும், வயநாடு எம்.பி.,யுமான பிரியங்காவுடன் வந்து அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.
கலைஞர் சமாதி அலங்காரம் - தமிழக பாஜக கடும் கண்டனம்
இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்தது வரம்பு மீறிய செயல் என குறிப்பிடுள்ளார்.
கட்சிக் கொடியில் யானை சின்னம் குறித்து பதிலளிக்க தவேக தலைவர் விஜய்க்கு உத்தரவு
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி அக்கட்சி தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நன்றி
வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பிறபித்த உச்சநீதிமன்றத்துக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சிறுபான்மை சகோதரர்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிட மாட்டோம் என தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவை காங்கிரசால் மட்டுமே வீழ்த்த முடியும் - ராகுல் காந்தி திட்டவட்டம்
காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜக வை தோற்கடிக்க முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
முதல்வரின் பதிலை கேட்கும் தமிழக மக்களின் காதுகள் பாவமில்லையா? - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
தமிழ்நாடு முதலமைச்சருக்கு குற்றங்களை தடுக்கும் நிர்வாகத் திறன் என்பது தான் துளியும் இல்லையே? என்று அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டியுள்ளார்.