2026-ல் ஒரே வெர்ஷன்தான்; அது அதிமுக வெர்ஷன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி; சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப்பையில் அரிவாள்களே சாட்சி என விமர்சித்துள்ளார்.
பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி எனவும் போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி எனவும் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். "Already ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே Failure; இதில் இன்று Version 2.0 Loading ஆம். 2026-ல் ஒரே version-தான். அது அதிமுக version- தான் என பதிவிட்டுள்ள அவர், மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய "ஓ" (0) வாக போட்டு ByeByeStalin என சொல்லிவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.