free website hit counter

போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழ் சொற்களால் வணிக நிறுவனங்களை அடையாளப்படுத்துங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து தாக்கி அழித்த இந்திய ராணுவத்தினர், அங்கிருந்து வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். பஹல்காம் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தற்போது தெற்கு காஷ்மீர் பகுதியில் பதுங்கியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீர்
போலீசாரும் இந்திய ராணுவமும் கூட்டாக இணைந்து, தீவிரவாதிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், பூஞ்ச் மாவட்டத்தின் சுரன்கோட் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடம் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. அந்த இடத்தில் 5 வெடிகுண்டுகளும், 2 ரேடியோ செட்களும், 3 போர்வைகளும் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சில மணிநேரங்களில் பாகிஸ்தான்
ராணுவத்தினர், இந்திய எல்லைப் பகுதியில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது.

பாஜக ஆட்சியில் தொடர்ந்து மிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பில் அக்கறை செலுத்தும் பிரதமர் மோடிக்கு தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், போரின் போது அமல்படுத்தப்படும் மின்வெட்டு ஒத்திகை பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்பது உறுதி  என்று இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்திற்கு மத்தியில் விமானப்படை தளபதி ஏ.பி.சிங்  திடீரென பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அப்போது, எல்லையில் இந்திய போர் விமானங்களின் தயார் நிலை குறித்தும் எல்லை நிலவரம் குறித்தும் அவர் பிரதமர் மோடியிடம் விளக்கியதாக கூறப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: