அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சென்ற புதன்கிழமை இந்தியா மீது 25% வரிகளை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா இரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் என்று கூறிய போதிலும், தொடர்ந்து இரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் என்று ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
இந்தியாவின் இரண்டு மூத்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி, இந்தியா ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்குவதைத் தொடர விரும்புவதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளதாக அறியவருகிறது.
இந்திய அரசாங்கத்தின் தகவல்கள் சிலதை மேற்கோள் காட்டி, ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ், இரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்துவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும், விலை நிர்ணயம் மற்றும் பிற பொருளாதாரக் கருத்தாய்வுகளின் அடிப்படையில் இந்திய சுத்திகரிப்பு நிலையங்கள் இன்னும் கொள்முதல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.