ஒருவேளை நமக்கு பிரதமர் மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை சொல்லுங்கள் என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு இளையராஜா அளித்துள்ள பேட்டியில், இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த அனைத்து பிரதமர்களின் பெயர்களையும் எழுதுங்கள் எனவும் இன்னொரு பக்கம் பிரதமர் மோடிக்காக ஒரு பட்டியலையும் தயார் செய்யுங்கள். அப்போது வித்தியாசத்தை நீங்கள் காண்பீர்கள் என்றும் கூறினார். ஒருவேளை நமக்கு மோடி தேவை இல்லையென்றால், அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள் எனவும் அப்படி யாரேனும் இருக்கிறார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.
பிரதமரால் எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது தனக்கு ஆச்சரியமாக இருந்தது கூறிய பிரதமர், விருது வழங்கும் விழாவுக்கு பின் பிரதமரை சந்தித்ததாகவும் அப்போது நீங்கள் இன்னும் 20 ஆண்டுகள் இந்தியாவை ஆள வேண்டும் என தான் கூறியது நடந்து கொண்டிருக்கிறது என்றும் இளையராஜா தெரிவித்தார்.