free website hit counter

பஹல்காம் பயங்கரவாதிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் - இந்திய பிரதமர் மோடி பேச்சு

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கில இந்திய வானொலி மூலம் மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களோடு கலந்துரையாடிய அவர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத சம்பவம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் காயப்படுத்தியுள்ளது என தெரிவித்தார்.

காஷ்மீரில் அமைதி திரும்பியது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உற்சாகம் இருந்தது, கட்டுமானப் பணிகள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் அதிகரித்தன, ஜனநாயகம் வலுவடைந்து வந்தது, சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சாதனை விகிதத்தில் அதிகரித்து வந்தது, மக்களின் வருமானம் அதிகரித்து வந்தது, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வந்தன என அப்போது தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் எதிரிகள் அதை விரும்பவில்லை எனவும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போரில், நாட்டின் ஒற்றுமை, 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமை ஆகியவையே நமது மிகப்பெரிய பலம் எனவும் பிரதமர் மோடி கூறினார். பயங்கரவாத தாக்குதல் குறித்த புகைப்படங்களைப் பார்த்த பிறகு ஒவ்வொரு இந்தியரின் ரத்தமும் கொதிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது என்றும் பஹல்காமில் நடந்த இந்தத் தாக்குதல் பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களின் விரக்தியையும் அவர்களின் கோழைத்தனத்தையும் காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.

ஒரு தேசமாக நாம் வலுவான மன உறுதியை வெளிப்படுத்த வேண்டும் கூறிய பிரதமர் மோடி பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, முழு நாடும் ஒரே குரலில் பேசுகிறது கூறினார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கும் என்று மீண்டும் ஒருமுறை உறுதியளிக்கிறேன் என கூறிய பிரதமர் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: