டெல்லியில் நடைபெற்ற ஏபிபி உச்சிமாநாட்டில் பங்கேற்று பேசிய இந்திய பிரதமர் மோடி, இந்தியாவின் தண்ணீர் இனிமேல் நாட்டின் நலனுக்காக பாயும் என தெரிவித்தார்.
பெரிய முடிவுகளை எடுப்பதற்கும் இலக்குகளை எட்டுவதற்கும் நமது நாட்டின் திறன் மீது நம்பிக்கை கொள்வது மிக முக்கியும் என்றும் பிரதமர் மோடி கூறினார். முந்தைய காலத்தில் இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீர் நாட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருந்தது என்றும் இந்தியாவின் நதிநீர் இனி நமது நாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.