பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இந்திய கடற்படையும் இணைந்து கண்ணி வெடியின் யுத்த சூழல் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட எம்.ஐ.ஜி.எம்., எனப்படும் இந்த கண்ணிவெடியின் சோதனை வெற்றிகரமாக செய்ததாக பாதுகாப்பு அமைச்சக அலுவலகம் தெரிவித்துள்ளது.
நவீன கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிராக இந்திய கடற்படையின் திறன்களை மேம்படுத்த எம்.ஐ.ஜி.எம். வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைக்காக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், டி.ஆர்.டி.ஓ., இந்திய கடற்படை மற்றும் தொழில்துறையைப் பாராட்டியுள்ளார். இந்த அமைப்பு இந்திய கடற்படையின் கடலுக்கடியில் போர் திறன்களை மேலும் மேம்படுத்தும் என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.